Author Topic: விம்பம்.  (Read 782 times)

Offline SweeTie

விம்பம்.
« on: November 08, 2018, 03:20:54 AM »
என்  மனக்கண்ணாடியில்   தெரிகிறான் 
கண்   கொட்டாமல் பார்க்கிறேன்
மாதவி மையல் கொண்ட கோவலனா ?
கோதைகள்  கொஞ்சிவிளையாடும்
மீராவின்  காதலனா ?
சுட்டு விழிகளில் சொட்டும் காதலில்
தோய்த்தெடுத்தேன்   என் இதயம்
பட்டு மேனியில்  பரந்த பார்வையால்
சற்றே சிவந்தேன் ...சிலிர்த்தும்  போனேன்
கற்றை குழலும்  காற்றில் தவழ அவன்
கட்டை விரலால் மெதுவாய் விலத்தி
துடிக்கும் விழிகளில்   துளாவினான்
ஏவு கணைகளை மிஞ்சிய அகோரம்
ரணமாகியது  பேதை  இதயம்
பீறிட்டு  வெளியேறின கண்ணீர்த்துளிகள்
 சங்கல்பமானது  அவன்  விம்பம்.

 

Offline JoKe GuY

Re: விம்பம்.
« Reply #1 on: November 08, 2018, 12:01:23 PM »

]2018 வருடம் நவம்பர் மாதம் ஆறாம்தேதிதீபாவளி முதல் உங்களுக்கு காதல் ரச கவிஞர் என்று பட்டம் அளிக்கப்படுகிறது
« Last Edit: November 08, 2018, 12:03:11 PM by JoKe GuY »
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: விம்பம்.
« Reply #2 on: November 08, 2018, 08:49:20 PM »
.இந்த  பட்டம் எப்போதோ  வழங்கியாயிற்றே!!! அதற்கு மேல்  ழங்கவேண்டுமென்றால்  கலைமானி பட்டம்தான் வழங்கவேண்டும்.   இருப்பினும்   விரும்பி வாசித்தமைக்கு நன்றி
« Last Edit: November 08, 2018, 09:00:51 PM by SweeTie »