Author Topic: இறைமனம்  (Read 607 times)

Offline Guest

இறைமனம்
« on: November 01, 2018, 04:56:45 PM »
ஆழ்ந்த சிந்தனையின்
முடிவில் இறைவனிடம்
ஏதோ யாசித்து
முடித்துக்கொள்கிறது மனது...
.
மீளாத்துயரங்களின் நடுவே
பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பதில்
மீட்டெடுத்துக்கொள்கிறது
மீண்டுமொரு இதயம்...!!
.
நித்திரைகளற்ற இரவுகளின்
பெரும்பகுதியை சில
துரோகங்களோ சில ஏமாற்றங்களோ
சில திருப்தியின்மையோ சேர்ந்து
சில இயலாத வைராக்கியங்களை விதைக்கின்றன...!!
.
கனவுகளின் பெரும்பகுதி
தொடர்புகளற்ற குரோதங்களையும்
அர்த்தமற்ற அன்பையும்
கோர்த்தெடுக்கவியலாத விடயங்களையும்
வெறுமனே காட்சிப்படுத்துகிறது...!!
.
அகல விரிந்த வானவெளியில்
நேற்றிரவில் பார்த்த நட்சத்திரங்களை
இந்த இரவிலும் தேடும் விழிகள்
தேடலில் ஏதும் தேவை இருப்பதில்லை...
.
சிரமங்களின்போதும்
துயரங்களின்போதும்
யாருமற்றதோர் ஏகாந்ததை
அனுபவிக்கும்போதும்
இல்லாமை உணரும்போதும்
வெளிக்காட்டாது சுயம் புன்னகைத்து
பெருவாழ்வு வாழ்வதாய்
புனைந்துகொள்வதில் இருக்கிறது
அர்த்தமுள்ளதோர் வாழ்வு....!!
.
மூக்கின் நுனியில் வாளின்
கூர்முனை உரசிச்செல்லும்போதும்
எதிரில் நிற்கும் சினத்தை
கூர்ந்து பரிவோடு பாற்கும்
விழியின் புன்னகை
இதயத்தின் பொறுமையை
வெளிக்காட்டிவிடுகிறது...!!
.
காலப்பெருவெளியில்
எல்லோரும் யாசிப்பதற்கோர்
பெருவள்ளல் அருள் கொண்டு
பதில் சொல்லும்
ஆகச்சிறந்த ஏகன் மட்டுமே....!!
.
நம் யாசித்தலின் மொழி
அவன் அறியாதிருப்பதில்லை
நினையாபுறத்து நாம்
அறியாதிருக்க அருள் பொழிவான்....
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ