Author Topic: மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்  (Read 786 times)

Offline Ayisha

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்




சில நேரங்களில் வேண்டாம் என ஒதுக்கும் சோளத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளது. சோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம்(Genus) ஆகும்.

இவற்றுள் சில தானியங்களுக்காகவும் வேறு சில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சோளத்தில் பார்வைக் குறைபாட்டை தடுக்கும் பீட்டா கரோட்டீன், புற்றுநோயை தடுக்கும் பெருலிக் அமிலமும் அடங்கியுள்ளது.

சோள மாவில் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கும் ஃபோலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், நமது நரம்பு மண்டலத்தை அமைதியுடன் செயல்பட வைக்கும் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளன. நீரிழிவு நோய் செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

எனினும் மூல நோயாளிகள் சோள உணவை தவிர்ப்பது நலம்.