Author Topic: #பிறவா_அன்பு_ம(கள்)களுக்கு  (Read 863 times)

Offline Guest

மகவுகள் என்பதே அன்பு..
மகள்கள் என்பது தாயை
 உணர்த்தும் பேரன்பு.

பிறந்த மகள்களை போலவே
பிறவா மகள்களும் ஆர்ப்பாட்டமான
அன்புக்குரியவர்கள்..

தூக்கி சுமப்பவர்கள் என்பதாலேயே
மகள்களை தூக்கிச்சுமக்கும்
சமூகத்தோடு உடன்படுவதில்லை
எனினும்

ஆசை தீர அழகு செய்திட
பிரிவுகளில் நேசம் உணர்ந்திட
இறை விரும்பும் இன்னொரு
தலைமுறை வளர்த்திட என மகள்
கூட்டும் உணர்வுகள்
அழகியலின் விளிம்புகள்
வாழ்வியலின் உச்சநிலை

மகள்கள்
உறுத்தாத பெரியமனுஷிகள்
இம்சிக்காத இராட்சஸிகள்
நீங்காத அன்புக்குரியவர்கள்

நேசம் நிறையும் விதிகள் செய்து,
பொய்க் கண்டிப்போடு அன்பு
செய்வதாலே வாழ்வை அர்த்தமோடு
அழகாக்கி போகவல்ல ரிப்பன் தரித்த
தேவதைகளே மகள்கள்.

#பிறவா_அன்பு_ம(கள்)களுக்கு
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ