Author Topic: ★எழுதித் தீரா வலியின் ரா★  (Read 856 times)

Offline Guest


பேனாவற்றிருக்கும் நிம்மதியில்
தூங்கிட நினையும் பிரயத்தனங்கள்
தோல்வியுறுகையில்
கவிதையாகிறது இருள்

தப்பித்தலின் பொருட்டைத் தேடி
ஓடோடிக் களைப்படைந்ததும்
பகலின் வெளிச்சத்தில்
புலவன் பட்டம்

குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும்
வாழ்க்கைக்குத் தெரியுமா
மனசாட்சியற்ற இராத்திரியை
எழுதித் தீர்ப்பதின் வலி
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ