ஆப்கானியர்கள்
பிறவி போராளிகள்!
அவர்கள் நெருப்பையும்
எரிக்கும்
நெருப்புகள்.
எதிரிகளோடு
போராடுவதே
அவர்களது வாழ்க்கை!
அது, அடக்குமுறைக்கு
பணியாத
சுதந்திர வேட்கை!
எதிரிகளால்
வெடிகுண்டுகளை
வீச முடியும்.
இவர்களால்
வெடி மருந்துகளாகவே
மாற முடியும்.
பதுங்கு குழிகள்தான்
அவர்களுக்கு இல்லங்கள்!
பீரங்கிகள்தான் கட்டில்கள்!
துப்பாக்கிகள் தான்
ஊன்று கோல்கள்!
அவர்களுக்கு
பிடித்த எழுத்து
ஆயுத எழுத்து!
அமெரிக்கர்களே…!
பன்னாட்டு கூலிப்படைகளே…!
தோல்விகளை மறைக்க
தேடுதல் வேட்டை
நடத்துபவர்களே…!
ஆப்கானின்
நெடிய மலைத்
தொடர்களில்
இன்னும் யாரை
தேடுகிறீர்கள்?
அங்கே
திராட்சை தோட்டங்களில்
கன்னி வெடிகளை
புதைத்தீர்கள்
காந்தஹாரின் வீதிகளை
வெடிவைத்து
தகர்த்தீர்கள்
உங்கள் ஆயுதங்கள்
தோரா போரா
மலையடிவாரங்களை
துளைக்கலாம்.
இரும்பு இதயங்களை
நொறுக்க முடியுமா?
ஆப்கானில்
உடைந்த வாளும்
தலை சீவும்
பழுதடைந்த
தோட்டாக்களும்
உங்கள்
நெஞ்சம் பிளக்கும்
எம் போராளிகளின்
இதயத் துடிப்புகள்
உங்களுக்கு
வேட்டு சத்தங்கள்!
எதிரிகளே..
உங்கள் ஆயுதங்களில்
உயிர் இல்லை.
காரணம்
நீங்கள் கோழைகள்!
ஆப்கானியர்களோ…
விடுதலை எரிமலையின்
புதல்வர்கள்!
நீங்கள் கூலிப்படைகள்
அவர்களோ
இறைவனின் போராளிகள்!
ஆண்டுகள் பல கடந்தாலும்
வற்றிப் போகவில்லை
வீரத்தின் குருதி!
இன்ஷா அல்லாஹ்
நீங்கள்
தோற்கப் போவது உறுதி!
சுடப்பட்ட போராளிகள்
அங்கே வீழ்வதில்லை
சுவர்க்கத்தில்
வாழ்வார்கள்.
ஷஹீதான சகோதரர்களின்
விடுதலை மூச்சு
காற்றழுத்த
தாழ்வு மண்டலமாய்
உருவாகியிருக்கிறது.
ஆப்கானியர்களின்
விடுதலை வெப்பத்தில்
ஏகாதிபத்தியத்தின்
ரசாயன குண்டுகள்
செயலிழந்து போடும்!
தன்மானப் போரில்
சுதந்திரம் மலரும்.
- எம். தமிமுன் அன்சாரி