Author Topic: கடவுளுக்கு கால் வலித்தது!  (Read 5598 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கடவுளுக்கு கால் வலித்தது!


"கடவுளுக்குக் கால் வலிக்காதா? பாவம், இப்படி நின்னுண்டே இருக்காரே? யாராச்சும் அவரிட்டே சொல்லக் கூடாதா? எத்தனை வருஷமா நானும் பாக்கிறேன்? கொஞ்ச நாழி உக்காந்தா நல்லா இருக்குமில்லே?"

பெருமாளைப் பல வருஷங்களாகப் பார்த்து இப்படி வெள்ளந்தியா ஆதங்கப்பட்டான் சோமாசி.

அவன் அந்த கோயில்லே பல வருஷங்களா குப்பைகளைக் பெருக்கி சுத்தம் செய்பவன்.
அவனுக்குத் தெரியுமா, அன்னிக்கு ராத்திரி கடவுள் அவன் கனவுலே வரப்போறார்ன்னு.
வேலை அசதியில் நல்ல தூக்கம்.

"சோமாசி, எனக்கு கால் வலிக்காதான்னு கவலைப் பட்டியே? நான் ஒண்ணு சொல்றேன் கேட்கிறாயா?"

கடவுள், சோமாசி கனவுலே வந்து அவனிடம் கேட்கிறார்.

"நீங்க யாருயா? உங்களுக்கு என்ன வேணும்?", சோமாசி.

"நான் தான்யா, கடவுள். நீ நேத்திக்கு என்னைப் பாத்து சொன்னியே? யாராச்சும் அவரிட்டே கொஞ்ச நாழி உக்காரக் சொல்லக் கூடாதான்னு?"

"ஆமாங்க, செத்தே நாழி உக்காந்தா என்னங்க?" கடவுளிடம் என்ன பேசுவதுன்னே தெரியாம அவரிடம் பேசுகிறான்.

"நீ கேட்டதும் நல்லாத்தான் இருக்கு. ஆனா, நா உக்காந்தா கொஞ்ச நாழி நீ அங்க நிக்கனுமே? இல்லாட்டா கடவுள் எங்க போயிட்டார்ன்னு எல்லாரும் தேடுவாங்களே?"
"ஆமாங்க, நீங்க சொல்றதும் சரிதாங்க. நான் வேணா உங்களுக்காக நீங்க சொல்ற வரை,
நிக்கேறேங்க."

"நான் சொல்லறத கேட்டுகிட்டு நீ சும்மா பொறுமையாக நின்னாப் போறும், வேற ஒன்னும் செய்ய வேண்டாம். உன்னப் பாக்க வரவங்களைப் பாத்து சிரிச்சுக்கிட்டு இரு. சரியா"

"சரிங்க எசமான்".

காலையில் கடவுள் இருக்கிற இடத்தில் சோமாசி போய், அவருடைய வேஷத்தில் பொருத்தமாக நின்னு கொண்டான். கடவுளும் தூரத்தில் நின்று கொண்டு நடக்கபோற சம்பவங்களை பார்த்துக்கொண்டு இருந்தார்.

கடவுளைத் தரிசனம் செய்ய ஒரு பணக்காரன் வந்தான். உண்டியலில் ஒரு பெருந்தொகையைப் செலுத்தி விட்டு, தான் தொடங்கிருக்கும் வணிகத்தில் நிறைய லாபம் கிடைக்க அருள் புரிய வேண்டினான். போகும் போது தெரியாமல் தன்னுடைய பணப்பையை அங்கேயே வைத்து விட்டுச்
சென்று விட்டான்.

சோமாசி பணக்காரர் பணத்தை வைத்து விட்டுப் போவதைப் பதைத்துப் போனான். ஆனால் கடவுளிடம் சொன்ன வாக்கு, அவனை ஒன்றும் செய்ய விடாமல் தடுத்தது.
சிறிது நேரத்தில் ஒரு வயதான ஏழை வந்து, கடவுளிடம்,

"பெருமாளே, என்னிடம் ஒரு ரூபாய் தான் உள்ளது. இதை உன்னிடம் தந்து விடுகிறேன்.
நீ தான் என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும்"
என்று மனதார கண்ணை மூடிக் கொண்டு, அந்த ரூபாயை உண்டியலில் சமர்பித்து விட்டு கண்ணைத் திறந்து பார்த்தான். எதிரே பணக்காரர் வைத்துவிட்டு போன பை கண்ணில் பட "கடவுள் கண்ணைத் திறந்துவிட்டார், எனக்காகத் தான் இந்தப் பை உள்ளது போல இருக்கு"
என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பையை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடக்கலானான்.

எல்லாவற்றையும் கடவுளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் சோமாசிக்கு உடனே சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது.ஆனால் கடவுளுக்கு கொடுத்த சத்யம் நினைவுக்கு வர அமைதியானான்.

அதற்குப் பிறகு ஒரு மாலுமி வந்து கடவுளை தரிசிக்க வந்தான். அவன் தான் போக இருக்கிற பயணம் எந்த இடையுறும் இல்லாமல் இருக்க வேண்டினான். அந்த சமயம், பணத்தை தொலைத்த பணக்காரன், போலீஸ் துணையுடன் அங்கு வந்து,

"இந்த மாலுமிதான் பணத்தைத் திருடி இருக்கணும், அவனை கைது செய்யுங்கள்"
என்றான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சோமாசி, நடந்ததைச் சொல்லிவிடலாம் என நினைத்தான்.

அந்த சமயம் மாலுமி, கடவுளைப் பார்த்து,"உன்னை தரிசிக்க வந்ததற்கு சரியான கஷ்டம் கொடுத்து விட்டாய் நானா திருடன், ஏன் வாயை முடிக்கொண்டிருக்கிறாய்? நீ சொன்னாத்தான் அவர்கள் நம்புவார்கள் " என்று வருத்தத்துடன் கூறினான்.
கடவுள் என்னிக்கு பேசியிருக்கார்.

பணக்காரன், கடவுளைப் பார்த்து, " ,திருடனைக் கட்டிக் கொடுத்ததற்கு உனக்கு நன்றி"
என்றான்.

நடக்கிற விஷயங்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை சோமாசிக்கு. நிஜமான் கடவுள் இப்போது இங்கு இருந்தால், அவர் தலையிட்டு இதனை சரி செய்து இருப்பார் என நினைத்த சோமாசி, உடனே, "உண்மையான திருடன் மாலுமி அல்ல,
ஏழை தான்" என்று கடவுள் சொல்வதைப் போல் சொன்னான். போலீசும்
கடவுள் தான் சொல்லிவிட்டார் என்று நினைத்து, மாலுமியை விடுதலை
செய்து, அந்த ஏழையைக் கைது செய்தனர்.

மாலுமியும், பணக்காரரும் கடவுளுக்கு நன்றி கூறினர்.

இரவு படுக்கும் போது, கடவுள் வந்ததைப் பார்த்து,

"ஐயா,. உங்க கஷ்டம் இப்போ தான் தெரிந்தது. நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலும் நான் செய்தது போலத் தானே செய்து இருப்பிர்கள், என்ன நான் செய்தது சரிதானே?"
என்று அப்பாவியைப் போல தான் திருடனைக் காட்டி கொடுத்ததை பற்றிப் பேசினான்.
கடவுளுக்கே அல்வா!!

."என்ன இப்படி செய்துவிட்டாய்?" என்று கடவுள் கோபித்துக் கொண்டார்.
:என்னங்க தப்பா செய்துட்டேன்?"

"என் மேலே உனக்கு நம்பிக்கை இல்லை. உன்ன நான் சும்மாத்தானே நிக்கச் சொன்னேன், என்னமோ நீயே கடவுள் மாதிரி தீர்ப்பு சொல்லி எல்லாத்தையும் கெடுத்து விட்டாய்"

"என்னங்க நீங்க சொல்றிங்க?"

"பின்னே என்ன, அந்த பணக்காரன் கள்ளத்தனமாக சம்பாதித்த சொத்துலே ஒரு பகுதியைத் தான் உண்டியல்லே போட்டான். அதே சமயத்திலே அந்த ஏழை, சோத்துக்கே வழியில்லாம தன்னிடம் இருந்த காசு எல்லாத்தையும் என் மேலே நம்பிக்கை வைத்து போட்டான். அதுக்காகத்தான் அந்த பணப்பையை அவனை எடுக்க வச்சேன். அதேபோல் மாலுமி கைது செய்யப் பட்டு ஜெயிலுக்கு போனால், அவன் கடலுக்கு போக
மாட்டான், கடலில் ஏற்பட இருந்த புயலில் இருந்து அவனைக் காப்பாற்றி இருப்பேன். பணப்பையை பணக்காரன் ஏழையிடம் இழப்பதால் அவன் செய்த கர்மங்களை சிறிது குறைச்சு இருப்பான்."

"ஆஹா, தப்பு செய்திட்டேனே சாமி." என்று வருத்தப்பட்டான் சோமாசி.

"இப்பத் தெரியுதா? அங்க நிக்கறது எத்தனை கஷ்டம்னு."
ஆமா சாமி, மன்னிச்சுக்குங்க, இனிமே இந்த மாதிரியெல்லாம் நினைக்க மாட்டேன்."

"நாம ஒண்ணு நினைச்சா, கடவுள் ஒண்ணு நினைக்குது"
எவ்வளவு சரி!!!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: கடவுளுக்கு கால் வலித்தது!
« Reply #1 on: February 22, 2012, 05:29:49 AM »
Intha story la kuda all is well nu than nan purunchukiten
epa ena nadanthaalum athu nalathuku than, athai purunchukita santhosama irukalam

nala kathai shur

Offline Global Angel

Re: கடவுளுக்கு கால் வலித்தது!
« Reply #2 on: March 14, 2012, 03:38:45 PM »
unmaithaan avaavar kastam avanga avanga ninaila irunthu paarthaalthaan purium  :)