Author Topic: நீதி வெல்லுமா? ராஜபக்சேயின் அரசு தண்டிக்கப்படுமா?  (Read 901 times)

Offline Yousuf


ஈழத்தமிழர்களின் 35 வருடகால இன போராட்டத்தை இந்தியா போன்ற வல்லாதிக்க கழுகுகளின் துணை கொண்டு   ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று ஜூன்  2009 ல் முடிவுக்கு கொண்டு வந்தது இலங்கை பேரினவாத அரசு.

ஐக்கிய நாடுகள் சபை என்ற போலி அமைப்பு ஈழத்தில் போர் நடந்த காலங்களில் மவுனித்து இருந்தது. இப்பொழுது  எல்லாம் முடிந்த பின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வரப்போகிறது ராஜபக்சேவை தண்டிக்கப்போகிறது என்பது நம்பமுடியாத விடயமாகவே இருக்கிறது.

இருந்தாலும் ஈழத்தமிழர்களின் நம்பிக்கையாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் திகழ்கின்றது. இதில் அமெரிக்க முழு வீச்சோடு ஈழத்தமிலர்களுக்கு துணை புரிந்தால் இதில் எதிர்பார்த்தது நடக்கும் சாத்திய கூறுகள் உண்டு. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பிக்கிறது.

இதன் தொடக்கமாக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசின் பிரதிநிதிகள்  "நல்லிணக்க ஆணைக்குழுவில்" குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைபடுத்துவதில் இலங்கை அரசின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளன. இதனால் இலங்கை அரசுக்கு கூடுதல் அழுத்தம் உருவாகும் என்று நம்பலாம். இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கு 57 பேர் கொண்ட குழு ஒன்றை இலங்கை அரசு ஜெனீவாவுக்கு  அனுப்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிரான பிரகடனங்களை முன்வைக்கும் எனவும் அதற்கு அதரவாக அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் செயல்படும் எனவும் அண்மையில் ஹலரி கிளிண்டன் அறிவித்திருந்தார். இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் முட்டாள்தனமான முடிவுகளினால் ஏற்ப்பட்ட பிரச்சனைகளே இத்தனை நிகழ்வுகளும் என்று உறுதியாக சொல்லலாம்.

ஈழத்து ஆயுத போராட்டத்தை மவுனிக்க செய்ய உதவியதன் மூலம் இலங்கையில் மேலாதிக்கம் செலுத்தலாம் என்று இந்தியா கனவு கண்டது. ஆனால் இலங்கையோ இந்தியாவின் எதிரி நாடுகளான் சீனா மற்றும் பாகிஸ்தானை உதவிக்கு அழைத்தது. இதனால் இந்தியாவின் மேலாதிக்க கனவு பகல் கனவாகி போனது அந்த இடத்தை சீனா பிடித்து கொண்டது. இலங்கையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் சீனாவையும் அதன் பின்புறம் இருக்கும் ரஷ்யாவையும்  எதிர்கொள்ளவே அமெரிக்க மற்றும் ஐயோப்பிய நாடுகள் ஈழ விஷயத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளன.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் வெற்றிகிரமாக நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு வழங்கப்படும் நிதிஉதவிகள் நிறுத்தப்படும். மேலும் இலங்கை மீது பொருளாதார தடைகளை கொண்டு வர முடியும். போர்குற்ற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு (போர்க்குற்றவாளி மிலோசெவிக் தண்டிக்கப்பட்டது போல) பயங்கரவாதி ராஜபக்சே தண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.  இது விசயத்தில் நாடுகடந்த தமிழ் ஈழ மக்களின் போராட்டங்கள் மிக முக்கியமாக அமைந்துள்ளது.  ஈழத்து சொந்தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி பிழைக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் ஒவ்வொருவரின் சிந்தனையும், கவலையும்.

Offline Global Angel

உண்மைதான் யோசுப் .... நாளை நடக்க இருக்கும் தீர்மானங்கள் ஈழ தமிழரை ஏமாற்றாமல் இருக்க பிரார்த்திப்போம்
                    

Offline Yousuf