இத்தனை நாள்
நான்
உன்மீது வைத்திருந்த
நேசத்தில்
காமம் இல்ல என்று
நினைத்து இருந்தேன் ..
இன்று இரவு
உன் நினைவுகளுடன்
இருக்கையில்
எனக்கும் காமம் வந்துவிட்டது
உன்மேல் ....
தனிமை
என்னும் கொடுமையான உடையை
அணிந்திருக்கும் உன்னை
பார்த்து என் மனம்
உன்மீது காமம் கொள்கிறது ....
நீ உடுத்தி இருக்கும்
தனிமை என்னும் உடையை
அகற்றுவதால்
உன் துன்பங்கள்
உன் ரணங்கள்
உன்னை நீங்கும்
என்ற நம்பிக்கையில்
நான் காமத்தோடு
காத்திருக்கிறேன் ....
இந்த விஷயத்தில்
நான் காமக்கொடூரனாய் இருப்பதில்
பெருமை கொள்கிறேன் ....