Author Topic: ○○இருள் ○○  (Read 762 times)

Offline Guest

○○இருள் ○○
« on: February 25, 2018, 11:17:24 AM »
இருளே !

உன்னை  நான்
நேசிக்கிறன்

ஏன் தெரியுமா ?

இருளில்தான்
நட்சத்திரங்களை ரசிக்க முடிகிறது

இருளில்தான்

உண்மைகள்   உறைந்துகிடக்கின்றது
சிந்தனைகள்  செதுக்கப்படுகின்றது
கனவுகள்        உருவாக்கப்படுகின்றது
காயங்கள்      ஆற்றப்படுகின்றது

உணைமயிலேயே

சூரியன் மட்டும் இல்லாதிருந்தால் ........

நாமெல்லாம்  இருளை
உணராது
உறங்கி இருப்போம் ...
என் வாய்க்காலில் உங்களுக்கான மீன் பிடிக்காதீர்கள்... என் தேடல்களில் உங்களை திணிக்காதீர்கள்...... ĐØĶĶÜ