Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
வாய் ஆரோக்கியம்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: வாய் ஆரோக்கியம்! (Read 879 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 47
Total likes: 47
Karma: +0/-0
Gender:
வாய் ஆரோக்கியம்!
«
on:
March 09, 2012, 06:20:16 PM »
வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் நமது சமுதாயத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. வாய் பகுதி ஆரோக்கியத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்கை பெருவதற்கான வாய்ப்பு உள்ளது. கீழே கூறப்பட்டுள்ள வழிமுறைகள் உங்களுக்கு மேன்மையான வாய்பகுதி ஆரோக்கியம் பெற வழி வகுக்கும்.
ஈறுகள் – இளம்சிவப்பு என்றால் ஆரோக்கியம்
உங்கள் ஈறுகள் பற்களை சுற்றி அவைகளை அதன் இடத்தில் பிடித்துக்கொள்ள உதவுகின்றன. ஈறுகளை ஆரோக்கியமாக வைத்துகொள்ள, நல்ல வாய்பகுதி சுகாதர பழக்கங்களை பின்பற்றவேண்டும் – பற்களை நாள் ஒன்றுக்கு இருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும், பல் இடுக்குகளை நாளொன்றுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சரியான கால பட்டியலில் பல் மருத்துவரின் ஆலோசனை பெற்றுகொள்ளவேண்டும். உங்கள் ஈறுகள் சிவப்பாகவும், வீங்கியும் மற்றும் லேசாக தொட்டாலே இரத்த கசிவு ஏற்படும்படயும் இருந்தால் அவைகள் கிருமிகளால் பாதிக்கபட்டிருக்கலாம். இதற்கு பெயர்தான் பல் ஈறு ரணம். உடனடியாக சிகிச்சை எடுத்துகொள்வதன் மூலம் நல்ல வாய் பகுதி ஆரோகியத்தை மீண்டும் அடையலாம். கவனிக்காமல் இருந்தால் பல் ஈறு ரணம் மேலும் பல் தீவிர ஈறு நோய்கள் (பெரியோடான்டிஸ்) உண்டாக காரணமாக இருப்பதுடன், நீங்கள் பற்களை இழக்கவும் நேரிடலாம்.
வாய் பகுதி ஆரோகியத்திற்காக பல் துலக்கவும்
வாய் பகுதி சுத்தம் சுத்தமான பற்களுடன் ஆரம்பிக்கிறது. பற்களை துலக்குவதில் நீங்கள் அடிப்படையாக கவனிக்கவேண்டியவை:-.
நாள் ஒன்றுக்கு இருமுறையாவது பற்களை துலக்குங்கள்பல் துலக்கும்போது அவசரப்படாதீர்கள், நன்றாக சுத்தம் செய்ய தேவையான காலம் எடுத்துகொள்ளுங்கள்.
சரியான பற்பசை மற்றும் பல்துலக்கியை உபயோகிக்கவும் ஃப்லூரைடு பற்பசை மற்றும் மிருதுவான பல்துலக்கியை உபயோகிக்கவும்.
நல்ல வழிமுறையை உபயோக்கவும் சிரிது சாய்வாக பல்துலக்கியை பற்களின் மேல் வைத்து பற்களை பல்துலக்கியால் முன்னும் பின்னுமாக அசைத்து துலக்க வேண்டும். பற்களின் உட்புரத்தையும், பல்லின் மெல்லும் பகுதி, மற்றும் நாக்கையும் தூய்மை செய்வதையும் நினைவில் கொள்ளவும். வேகமாக அல்லது மிகவும் கடினமாக அழுத்தி துலக்குவதை தவிர்க்கவும், ஏனெனில் இதனால் உங்கள் ஈருகள் பாதிக்கப்படும்.
பல்துலக்கியை மாற்றுவது மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது பல்துலக்கியை மாற்றுங்கள் அல்லது பல்துலக்கியின் இதழ்கள் பழுதடைந்துவிட்டாலும் சீக்கிரமாகவே பல்துலக்கியை மற்றுங்கள்.
வாய் பகுதி ஆரோக்கியத்திற்கான பொதுவான ஆலோசனைகள்
எப்போழுதும் மிருதுவான பல்துலக்கியை உபயோகிக்கவும்.
எப்பொழுதும் சாப்பிட்ட பிறகு வாயை கொப்பளிக்கவும்.
பல் இடுக்குகளில் மாட்டிகொண்டிருக்கும் உணவு பொருட்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
வரண்ட வாய்பகுதி உள்ளவர்கள் உமிழ்நீர் சுரப்பை உண்டாக்க சர்க்கரை இல்லாத சவ்வு மிட்டாயை சாப்பிடுங்கள்.
உமிழ்நீர் சுரப்பை உண்டாக்கவும், மெல்லுவதற்கு உபயோகப்படும் தசைகளுக்கு பயிற்சியளிக்கவும் கடினமான உலர்ந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
சிறிய குழந்தைகளுக்கு நிலக்கடலை அளவு பற்பசை மட்டும் உபயோகிக்கவும். மேலும் அவர்களை பல் துலக்கிய பிறகு பசையை துப்புவதற்கு ஊக்குவிக்கவும்.
எப்பொழுதும் சாராயம் (ஆல்கஹால்) இல்லாத வாய் கொப்பளிக்கும் திரவத்தை பயன்படுத்துங்கள், ஏனெனில் ஆல்கஹால் உள்ள வாய் கொப்பளிக்கும் திரவம் ஜீரோஸ்டோமியாவை (வரண்ட வாய்) உண்டாக்கும்.
நாக்கை சுத்தமாக வைத்து கொள்ள நாக்கு சுத்தம் செய்யும் தகட்டை உபயோகிக்கவும். கிருமிகள் நிரைந்த நாக்கினால் உருவாகக்கூடிய பிரச்சினைகளுக்கு ஹாலிடோஸிஸ் ஒரு உதாரணம் மட்டுமே. நாக்கை சுத்தம் செய்ய பல்துலக்கியையும் உபயோகிக்கலாம்.
ஒரு சில பற்கள் இழந்தவர்கள் செயற்கை பற்கள் பொருத்தி கொள்வது பற்றி யோசிக்கலாம். இவை பற்கள் இல்லாத சந்துகளுக்கு தீர்வாக அமைவதுடன், அசல் வடிவத்தை காண்பிக்கவும் பல் மகுடத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும்.
தேய்ந்து போன பற்கள் உடையவர்கள் பலவிதமான சிகிச்சை தீர்வுகளை பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசத்தை ஏற்படுத்தலாம். பற்களின் மேல் பொருத்தும் மகுடங்கள் (க்ரௌன்) பற்கள் சரியான வடிவத்தை பெற உதவும். மேலும் செயற்கை பற்களில் தேர்ந்தெடுக்க பல வித முறைகள் உண்டு.
இறுதியாக, புகைப்பிடிப்பது வாய்பகுதி சுகாதாரத்திற்கு கேடானது. பற்களின் நிறம் மாறுவதற்கு காரணமாவதுடன் புகைப்பிடித்தல் பல உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும் இது காரணமாகவும் அமையும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
வாய் ஆரோக்கியம்!