Author Topic: ~ !! யாதும் இசையாக !! ~  (Read 969 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! யாதும் இசையாக !! ~
« on: February 02, 2018, 12:20:36 PM »
யாவும் இசையே ..!!!
யாதும் இசையே  ...!!!

கார்மேகங்கள் ஒன்றிணைத்து
சொட்டு சொட்டென
தூறிடும் மழைத்துளியின்
இசையில்
முற்றிலும் நனைகிறேன் ...

சில்லென மேனியைப்
பட்டும் படாமல்
தழுவிச்செல்லும்
தென்றலின் இசையில்
உடல் சிலிர்க்கிறேன் ...

கம்பிரமாக பூமிதனைச்
சுற்றிலும் கவர்ந்துநிற்கும்
கடலலைகளின் இசையில்
எந்தன் மனமதைப்
பறிகொடுக்கிறேன்  ...

சுட்டெரிக்கும் அக்னியிலும்
இசையுண்டோ ...
அதனைச் செவிமடுத்து
அனலின் இசையில்
வியர்க்கிறேன் ...

நேற்று மலர்ந்த
பிஞ்சு மழலைகளின்
வாய்மொழி இசையில்
எந்தன் குழந்தைப்  பருவமதனை
நினைவுறுகிறேன் ...

உயிருக்குள் ஊடுருவிச்
செல்லும்
கார்குழல் கண்ணனின்
புல்லாங்குழல் இசையில்
மெய்மறக்கிறேன் ...

வியப்பில் விம்மும் ..
 நெஞ்சின் ஒலியை
இசையோடு ஒன்று
கலக்கிறேன் ...

இசையால் இதயம்
துடிப்பதனால் நித்தம்
நான்
உயிர் பிழைக்குறேன்..


எங்கும் எதிலும்
இசையில்
சூழ்ந்திருக்கிறேன் ...
அவ்விசையில்  கரைந்திடவும்
காத்துநிற்கிறேன் ....
~ !! ரித்திகா !! ~
« Last Edit: February 02, 2018, 01:21:49 PM by ரித்திகா »


Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: ~ !! யாதும் இசையாக !! ~
« Reply #1 on: February 02, 2018, 05:32:58 PM »
ரித்திகா வணக்கம்

"இசை" னு சொன்னாலே எனக்கு வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது என்ன பண்ண  ;D ;D

சுட்டெரிக்கும் அக்னியிலும்
இசையுண்டோ ...
அதனைச் செவிமடுத்து
அனலின் இசையில்
வியர்க்கிறேன்

அடடா ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா .சபாஷ்

இசையோடு பிறக்கிறோம்
இசையோடு இறக்கிறோம்
இசை மட்டும் தொடர்ந்து பயணிக்கிறது

வாழ்த்துக்கள் அருமையான கவிதை தொடர்ந்து எழுதுங்கள்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline JeGaTisH

Re: ~ !! யாதும் இசையாக !! ~
« Reply #2 on: February 02, 2018, 08:07:52 PM »
கவிதை அருமை ரித்திகா அக்கா  ;D ;D ;D ;D

பாஹா என்ன வரிகள் சூப்பர்

கவிதைகள் தொடர என் வாழத்துக்கள் ரித்திகா அக்கா