Author Topic: உண்மையான சில வரிகள்  (Read 3666 times)

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #15 on: October 07, 2025, 09:35:03 AM »


கொடுப்பவர்அல்லகடவுள் கொடுக்கவைப்பவர்தான்_கடவுள்

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான் அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்தபோதிலும் கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை!

ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையைப் பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான் அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்

ஒரு பிச்சைக்காரன் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்! இன்னொருவன் அரசனின் பெயரைச் சொல்லி பிச்சை கேட்டான்!

அரசன் தனது சேவகர்களிடம் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் தன் அவைக்கு அழைத்துவரும்படி ஆணையிட்டான் அவர்கள் அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் அவைக்கு அழைத்துவந்தார்கள்

அரசன் அவர்களிடம், "இருவருமே பிச்சை எடுப்பதைப் பார்த்தேன் ஒருவர் கடவுள் பெயரைச் சொல்லியும் இன்னொருவர் அரசின் பெயரைச் சொல்லியும் பிச்சை எடுத்த காரணம் என்ன  என்று கேட்டான்

அதற்கு கடவுள் நம்பிக்கை கொண்ட பிச்சைக்காரன், "அரசே! இந்த உலகம் முழுவதையும் காப்பவன் இறைவன் தான்! இறைவனின் அருளால் மட்டுமே ஒருவன் செல்வந்தனாக மாறமுடியும் அதனால் தான் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

மற்றொரு பிச்சைக்காரன் அரசே இறைவன் கண்ணுக்குத் தெரியாதவன் ஆனால் கண்ணுக்குத் தெரிந்த விஷயம் அரசன் மட்டுமே அரசனால் மட்டுமே ஒருவன் செல்வம் பெறமுடியும்  அதனால் தான் அரசன் பெயரைச் சொல்லி பிச்சை கேட்கிறேன் என்றான்

அரசன் இருவரையும் அனுப்பிவிட்டு தன் அமைச்சரிடம் இதுபற்றி ஆலோசித்தான்

அமைச்சர் அரசனிடம் அரசே முதல் பிச்சைக்காரன் சொன்னது தான் சரி இறைவன் அருள் இருந்தால் தான் அந்த உதவியைப் பெறமுடியும் என்றார்.

அரசனும் இறைவன் அருளா அல்லது அரசனின் அருளா  என்று சோதித்துப்பார்க்க தீர்மானித்தான்

சிலநாட்களில் அந்நாட்டிலுள்ள கோயிலில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அன்று அரசனும் குடிமக்களுக்கு சில பரிசுகள் அளிக்கப்போவதாக அறிவித்தான். பரிசினைப் பெற குடிமக்கள் அனைவரும் வந்தனர் அவர்களுடன் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் வந்தனர்.

அரசன் ஒவ்வொருவருக்கும் புதிய துணி ஒன்றையும் கூடவே பரங்கிக்காய் ஒன்றையும் பரிசளித்தான் அரசின் பெயரில் பிச்சை எடுப்பவனுக்கு மட்டும் பரங்கிக்காயினுள் தங்க, வைர நகைகளை வைத்து பரிசளித்தான் கடவுள் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவனுக்கு எல்லோரையும் போலவே துணியும் பரங்கிக்காய் மட்டும் பரிசளித்தான்

சில நாட்கள் கழிந்தன அரசன் ஒரு நாள் நகர்வலம் சென்றான். அப்போது அரசன் பெயரைச் சொல்லி பிச்சை எடுப்பவன் சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுப்பதை கண்ட அரசனுக்கு தான் பரங்கிக்காயின் உள்ளே தங்க வைர நகைகள் வைத்து பரிசளித்தும் இவன் பிச்சை எடுக்கவேண்டிய காரணம் என்ன என்று வியப்பு தோன்றியது.

உடனே அரசன் அந்த பிச்சைக்காரனிடம் நான் அன்று உனக்கு பரிசுகள் அளித்தேனே அதற்குப் பிறகும் நீ பிச்சை எடுக்கவேண்டிய அவசியம் என்ன என்று கேட்டான்.

அந்த பிச்சைக்காரனும் அரசே நீங்கள் அன்று ஒரு பரங்கிக்காய் பரிசளித்தீர்கள் அதை நான் ஐந்து வெள்ளிக்காசுகளுக்கு ஒருவனுக்கு விற்றுவிட்டேன் அந்த ஐந்துவெள்ளிக்காசுகளை வைத்து எத்தனை நாட்கள்நான் உண்ணமுடியும் அதனால் மீண்டும் பிச்சை எடுக்க வந்துவிட்டேன் என்றான்

அதைக் கேட்ட அரசன் கோபமுற்று அடேய் மூடனே நான் உனக்கு பரிசளித்த பரங்கிக்காயினுள் தங்க வைர நகைகள் வைத்திருந்தேனே நீ அதனை வெட்டிப் பார்த்திருந்தால் அறிந்திருப்பாயே!  என்று அவனை திட்டிவிட்டு நகர்ந்தான்.

சற்று தூரத்தில் ஒரு செல்வந்தனை கண்டான். அவன் இறைவன் பெயரைச் சொல்லி பிச்சை எடுத்தவன் என்பதையும் அரசன் அறிந்துகொண்டான்.

அரசன் அவனிடம் சென்று ஐயா நீங்கள் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தீர்கள் அல்லவா  இப்போது எப்படி செல்வந்தனாகிவிட்டீர்கள் என்று கேட்டான்

அதற்கு அவனும் அரசே நான் என் தந்தை இறந்த தினத்தில் சிலருக்கு இறைவன் பெயரைச் சொல்லி அன்னதானம் செய்வேன். அன்று ஒருவனிடம் ஐந்து வெள்ளிக்காசு கொடுத்து ஒரு பரங்கிக்காய் வாங்கினேன்  அதனை சமைப்பதற்காக வெட்டியபோது அதனுள் தங்க, வைர நகைகள் இருப்பதைக் கண்டேன்  இறைவன் அருளால் இன்று நான் செல்வந்தன் ஆகிவிட்டேன்  என்று கூறினான்.

இறைவன் அருள் இல்லையென்றால் வாழும் வாழ்வில் எந்த வளமும் பெறமுடியாது என்பதை அரசன் புரிந்து கொண்டான்

நாம் நல்லாட்சி செய்வதற்கும் இறைவன் அருளே என்று அரசன் அறிந்துகொண்டான்!!

"நல்லமனம் படைத்தவர்களுக்கு இறைவன் எப்போதும் அருள்புரிகிறான்.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #16 on: October 09, 2025, 10:56:05 AM »


*இளவரசியை பெற்ற மகாராஜாக்கள்..*
------------------------------------------------

ஒரு கர்ப்பிணிப் பெண் தன் கணவரிடம் கேட்டாள், நீங்கள் என்ன குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள்? ஆணா பெண்ணா?

கணவன்- "நமக்கு ஒரு பையன் பிறந்தால் , நான் அவனுக்கு கணிதம் கற்பிப்பேன், நான் அவன் விரும்பும் விளையாட்டுகளை கற்பிப்பேன், பொழுது போக்காக இசையை கற்றுக் கொடுப்பேன்."

மனைவி - "ஹா.. ஹா.. அதுவே ஒரு பெண்ணாக இருந்தால்?"

கணவன் - நமக்கு ஒரு பெண் பிறந்தால்.. நான் அவளுக்கு எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவள்தான் எனக்கு எல்லா விஷயங்களையும் கற்றுத் தருவாள்,

எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி பேசக்கூடாது., இதெல்லாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் கற்பேன். அவள் கற்பிப்பாள்.

சுருக்கமாக, சொல்ல வேண்டுமென்றால் அவள் என் இரண்டாவது அம்மாவாக இருப்பாள்,

நான் சிறப்பாக எதுவும் செய்யாவிட்டாலும் அவள் என்னை அவளுடைய ஹீரோவாகக் நினைப்பாள்,

நான் எப்போதெல்லாம் மறுப்பு சொல்வேன் என்று புரிந்துகொள்வாள்.

அவள் எப்போதும் தன் கணவனை என்னுடன் ஒப்பிட்டு பேசுவாள்..

எவ்வளவு வயதானாலும் அவளை என் குழந்தை போல நடத்த வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பாள்.

மனைவி - "அப்படியானால், உங்கள் மகள் அதையெல்லாம் செய்வாள், ஆனால் உங்கள் மகன் செய்ய மாட்டான் என்று சொல்கிறீர்களா?"

கணவன் - "இல்லை.. இல்லை! அவரும் அதை செய்தாலும் செய்வார், ஆனால் அவர் அதையெல்லாம் செய்யக் கற்றுக் கொள்வார்.

ஆனால் மகள்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டே பிறக்கிறார்கள்.

ஒரு மகளுக்குத் தந்தையாக இருப்பது எந்த ஆணுக்கும் பெருமை."

மனைவி, *"ஆனால், அவள் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டாளே."*

கணவன் - *"உண்மைதான், ஆனால் நாம் அவளுடன், அவள் இதயத்தில், என்றென்றும் இருப்போம்.*

அதனால் அவள் நம்மை விட்டு எங்கு சென்றாலும் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது."

மகள்கள் தேவதைகள்...

நிபந்தனையற்ற அன்பு மற்றும் அக்கறையுடன் பிறந்தவர்கள்...

 *என்றென்றும். மகள்களுடன் ஆசிர்வதிக்கப்பட்ட
அனைத்து அதிர்ஷ்டமான தந்தைகளுக்கும் இது சமர்ப்பணம்.
(Including my self)*

*வாழ்த்துக்கள் மகாலட்சுமியை பெற்ற தந்தைகளே..!*
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #17 on: October 09, 2025, 06:49:45 PM »
☕ நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.

அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறி விடுகிறது.

நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?

“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்.

ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது. அப்படியென்றால் என்ன காரணம்?

உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது.
ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்.
கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும். 💭

இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்.

வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்.
இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்.
ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம். 🙏

வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?

கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா?
நிச்சயம் இல்லை.

வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது.
அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…
இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!

நல்லவற்றை நமக்குள் நிரப்பி வைப்போம்!

மகிழ்ச்சி.

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #18 on: October 18, 2025, 10:05:56 AM »
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம். அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியை பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர்.

நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.

 அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர்.

இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள்.

 மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது.
தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.


Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #19 on: October 24, 2025, 04:11:17 PM »
👍👍👍 நான்கு 👍👍👍


1, அகம் பிரம்மாஸ்மி
2, தத்வமஸி
3, பிரக்ஞான பிரம்ம
4, அயபாத்ம பிரம்ம..

நிறைவு செய்ய முடியாத நாலு..

1, கனவு தூக்கத்தை நிறைவு செய்யாது
2, பெண்களுக்கு ஆசை நிறைவு செய்யாது.
3, தீயை விறகு நிறைவு செய்யாது.
4, குடிகாரனை குடி நிறைவு செய்யாது..‌

முடியாதது நான்கு

1, உயிர்கள் யமனை வெல்ல முடியாது.
2, ஆறுகள் சமுத்திரத்தை நிறைக்க முடியாது .
3, அக்னியை விறகு அணைக்க முடியாது.
4, அழகிகளை சாதாரண ஆண்களால் திருப்தி செய்ய முடியாது..‌

யுகங்கள் நான்கு..
1, கிரத யுகம்
2, திரோத யுகம்
3, துவாபர யுகம்.
4, கலியுகம்.‌

குணம் நான்கு..
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு..‌

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #20 on: October 26, 2025, 11:01:20 AM »
சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியதெல்லாம்
இப்போது போரடிக்கிறது..
திருவிழாக்கள்,

புதுத்துணிகள்,

பண்டிகைகள்,

சில நேரங்களில் சினிமா கூட..

ஏன் இந்த மாற்றம் ??

கடந்து வந்த கடினமான தருணங்களா,

நிராசையாகிப் போன பேராசைகளா,

நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா,

வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா,

அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா,

செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?!

Maturity aa,

எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை..

மாறாக,

தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..

தலைகோதி தேற்றுகிறது,

இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது..

பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது..

சினிமா எப்போதும் கட்டி அணைத்துக் கொள்கிறது..

ஆனால்,

ஏன்??இந்த இனம் புரியாத வெறுமை

நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??

காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனால்,இப்போதெல்லாம் ஏதும் பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை..

எதன் மீதும் தீராத காதல் தோன்றுவதில்லை..

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #21 on: October 30, 2025, 11:10:45 AM »
மனிதம் இன்னும்
உயிர்ப்போடு....

மழையில் குடையுடன் பேருந்திற்குக் காத்திருப்பவர்கள், அருகில் நனைந்துகொண்டிருக்கும் அந்நியர்களுக்கும் சேர்த்து
மெல்ல நகர்த்திப் பிடிக்கிறார்கள்.

இதுல பணம் எடுத்துத் தர்றீங்களா அண்ணே?” என்று ATM-ற்குள் உதவி கேட்கிற கைலி ஆசாமிக்கு ”ம்ம் குடுங்க” என்றபடி யாரோ கார்டை வாங்குகிறார்கள்.

ஒரு அஞ்சு நிமிசம் உக்காருங்கக்கா.. கட்டித்தர்றேன்” என்று கெஞ்சலாய் பூக்காரப்பெண் கேட்கும்போது, அடுத்த கடைக்குப் போக மனமில்லாது ”சரி வெய்ட் பண்றேன்” என்றபடி ப்ளாஸ்டிக் ஸ்டூலில் அமர்கிறாள் காட்டன் புடவை கட்டிய சகோதரி.

சாலையைக் கடக்கும்போது எதற்காகவோ அழுகின்ற மனைவியை தேற்றிக் கொண்டிருந்த கணவனின் பதற்றம் கண்டு, ”என்னாச்சு? தண்ணி வேணுங்களா?” என்றபடி ஷோல்டர் பேகின் ஜிப்பைத் திறக்கிறார் நீலச்சட்டை நபர்.

ஹாஸ்பிடலில் ஆபரேசன் தியேட்டர் முன்னால் கண் கலங்குபவர்களிடம் எல்லாம் சரியாகிவிடும் தைரியமா இருங்க என்று சொல்லும் சம்பந்தமில்லாத யாரோ.

பரவாயில்ல, பொறுமையா ஓட்டிகிட்டு வந்தீங்க. நானும் நிறைய இடத்துல கவனிச்சேன்” என்று பாராட்டியபடியே இருபது ரூபாயை எடுத்துக்கொடுத்த முதியவருக்கு சிரித்தபடி “தேங்க்ஸ் சார்” என்கிறார் ஷேர் ஆட்டோ ட்ரைவர்.

ஐந்து ரூபா இருக்கா” என்கிற கண்டக்டரின் ஸ்ட்ரிக்ட் தன்மைக்கு அஞ்சி அவசரமாய் தேடிக்கொண்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்காரருக்கு “இந்தாங்க இந்தாங்க”என்று கொடுத்து
உவுகிறார் முறுக்கு மீசைக்காரர்.

சைடு ஸ்டாண்ட் எடுத்துவிடுங்க” என்றும் துப்பட்டா சிக்கப்போகுது பாருங்க” என்றும் யாரோ வண்டியில் போய்கொண்டிருக்கிற யாரோவிடம் சுட்டிக்காட்டியபடியே இருக்கிறார்கள்.

ஹோட்டலின் டேபிளை துடைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் ”நீங்க சாப்டீங்களாக்கா?” என்று கேட்கின்றான் தோசைக்குக் காத்திருந்தவன் அவன் மனதளவில் தெய்வபிறவி.

ரசித்த பாடலின் லிங்கை வாட்சப்பில் அனுப்பிவிடுகிறவனுக்கு ஹார்ட்டீன் அனுப்பிவிட்டுச் சிரிக்கிறாள் சுடிதார் பெண்ணொருத்தி.

திருமண மண்டபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருக்கிற பெயர் தெரியா யாரோ குழந்தையுடன் முகத்தை கோணலாக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார் தாடிக்கார இளைஞர்.

கோவிலில் மூலவர் தரிசனத்தை பார்க்கும் போது, தான் அருகில் இருப்பவர்க்கு மறைக்கிறோம் என்று உணர்ந்தவுடன், சட்டென்று கொஞ்சம் பின் வாங்கும் கலர் சட்டைகாரர்.

ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு, பக்கத்தில் அழுகிறவர்களுக்கு எல்லாம் சரியாகிடும்" என்று யாரோ ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Emergency bloodவேண்டும் என்ற Whatsapp message பார்த்து தன் குரூப் என்று தெரிந்தவுடன் யாருக்கு என்று தெரியாமலேயே ஹாஸ்பிடலுக்கு ஓடும்
நண்பர்கள்.

இந்த உலகம் இன்னும் இன்னும்
மனித நேயத்தோடுதான் இயங்கிக் கொண்டிருப்பதைகவனித்திருக்கிறீர்களா ?

Offline RajKumar

Re: உண்மையான சில வரிகள்
« Reply #22 on: November 01, 2025, 12:00:43 PM »
✍அழகான வரிகள்....

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..