Author Topic: நானும் நீயும் இரு வேறு திசைகளில்...!  (Read 714 times)

Offline சாக்ரடீஸ்

காலங்கள் கொடுத்த
காயங்கள் சொல்ல ஆறுதல் கிடைத்தது
உன்னிடமிருந்து ...

விழி நீர் என்
கன்னம் நனைத்த போது
உந்தன் விரல் நீண்டது
அதை துடைக்க ...

சோகத்தில் நான் வாடி நின்ற போது
மடி சாய்த்து கொண்டாய்
காதல் கானம் பாடி

நான் கண்ணீர் சிந்திய போது
நீ உன்
இன்பம் மறந்தாய்....
நான் சிரித்த போது
நீ உன்
துன்பம் மறந்தாய்...

அழகிய காதல் வரலாறு
அப்படியே இருக்க
நானும் நீயும் இரு வேறு திசைகளில்
ஆனாலும் இருவர் நினைவுகளும்
என்றும் ஒரே திசையில்.....