Author Topic: தேன் பூசிய வார்த்தை  (Read 487 times)

Offline சாக்ரடீஸ்

தேன் பூசிய வார்த்தை
« on: January 21, 2018, 09:16:03 PM »
உன் நேசம் உண்மையா
என்று இதுவரை நான்
யோசிக்க கூட இல்லை ...
நான் நேசித்தது சத்தியம் ...
என் நேசம் உண்மை ...
என் அன்பு அளவில்லாதது ...
இன்று வரை உணர்த்தி
கொண்டிருக்கிறேன் ...
ஒரு கணம் கூட
நீ உணர்த்த முற்பட்டதும் இல்லை ...
உணர்த்தியதும் இல்லை ...
தேன் பூசிய வார்த்தைகளை
மட்டும் பேசி திரிக்கிறாய் ...
இனி நீ உணர்த்தி
நான் புரிந்து கொண்டு ...
என்ன ஆகி விட போகிறது ...
முடிந்தது எல்லாம் முடிந்தது ...
மாண்டவர் திரும்பார் என்பது போல ...