Author Topic: எனது தம்பி ஜெகா  (Read 531 times)

Offline MaSha

எனது தம்பி ஜெகா
« on: January 18, 2018, 03:47:48 PM »
ஜெகா என் அன்புத் தம்பி
என் ஆசைத் தம்பி
அக்கா அக்கா என்று அவன்
கொஞ்சிப் பேசுவதிலும்
ஒரு குழந்தைத்தனம் இருக்கும்

பாசம் காட்டுவதில் அவன்
பாசமலர் சிவாஜி
பேய் என்ற்றால் பயம் அவனுக்கு - ஆனால்
பெண்களைக் கண்டால் பயப்பட மாட்டான்
நிலா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்
அது வானத்து நிலாவா இல்லை
வையத்து நிலாவா
நானறியேன் பராபரனே

சாட்டில் அவன் இருந்தால்
தனி ஒரு கலகலப்பு
சங்கீதம் அவனது உயிர்
அவன் லிரிக்ஸ் டைப்  பண்ணினால்
போகும் வாசிப்போறது உயிர்

கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம்
தமிழ் தாயே எழுதாத என்று கெஞ்சினாலும்
விடாம எழுதுவான்
எழுத்துப் பிழைகள் இருந்தாலும் அவன்
கவிதையில் ஒரு உயிரோட்டம் இருக்கும்

ஜெகா அம்மா செல்லம்
அதனால் தான் என்னவோ
எல்லா பொண்ணுங்களுக்கும் அவனுக்கு அக்கா
அப்படி கூப்பிட்டு தனது வயதை குறைத்துக் கொள்வதில்
கில்லாடி இவன்

இப்படி எல்லாம் பெருமையும் புகழும் வாய்ந்த
எனது அருமை தம்பி ஜெகா
உனக்கு  எனது இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க நீ இனிதே வளமுடன்
வானத்து நிலா உன் கைகளில்
வந்து விழா வாழ்த்துக்கள் கூறும்
அக்கா மாஷா
« Last Edit: April 11, 2018, 02:48:23 AM by MaSha »

Offline JeGaTisH

Re: எனது தம்பி ஜெகா
« Reply #1 on: January 18, 2018, 04:01:01 PM »


இமைகள் பிரிந்தாலும் கண்களை விட்டு கருவிழி பிரிவதில்லை
மாஷா அக்கா எப்போதும் கருவிழி போல் அன்புல்ல அக்காவாக ,,,,


நன்றி மாஷா அக்கா
« Last Edit: January 18, 2018, 04:04:03 PM by JeGaTisH »