Author Topic: இனி ஒரு விதி செய்வோம்  (Read 1006 times)

Offline thamilan

இனி ஒரு விதி செய்வோம்
« on: December 28, 2017, 11:14:16 AM »
வாழ்வது ஒருமுறை
வாழ்த்தட்டும் தலைமுறை
முடிந்தால் வாழவைத்து வாழுங்கள்
இல்லையேல் வாழவிட்டு வாழுங்கள்
அது போதும்

மற்றவர்களுக்கு கொடுக்கப் பழகுவோம்
இல்லையேல் எடுத்ததையாவது
கொடுத்திட பழகுவோம்
ஏமாற்றி வாழ்வது வாழ்க்கையாவதில்லை
உயர்திணையையான மனிதனை விட
தாழ்ந்தது அஃறிணையான விலங்கினங்கள்
அவையோ மனிதரை போல
சக மனிதர்களை ஏமாற்றுவதில்லை
கிடைப்பதை  பகிர்ந்துண்டு வாழ்கின்றன   

உள்ளேயே உள்ளதுதான்   உலகம்
அதை உணர்ந்து கொண்டால்
கோடி இன்பம்
பிறப்புக்கு  ஒரு வழி
இறப்புக்கு பலவழி
இடைப்பட்ட வாழ்வில் பிழைப்பிற்கு ?

அது நேர்வழி என்று
இனியொரு விதி செய்வோம்
அதை எந்நாளும் காப்போம்