Author Topic: உன்னுடன் நானிருந்தால்  (Read 1005 times)

Offline SunRisE

பக்கம் பக்கமாய்
கவிதை எழுதுகிறேன் உன்
பக்கத்தில் அமர காத்திருக்கிறேன்

வெட்கம் உனக்கு அழகு
என்னிடத்தில்
தர்க்கம் செய்யும்
வேளையிலோ
பேரழகு

மல்லி சூடிடும்
இன்ப வள்ளியே
உன் கள்ளப்
புன்னகையைக் கண்டு
கரைந்து போகிறேன்
நானடி.

தேடாதோ உன்
இரு விழி என்னைத்
தேடாதோ.
தீராதோ
உன்னைத் தேடித்தேடியே
என் விழியின் வலி
தீராதோ.
பாடாதோ
காதல் ராகத்தை
உன் மனம் பாடாதோ.

என் காதலை
உன்னிடம்
சொல்ல முனைவதும்
அதனை நீ
மறுப்பதும்
வாடிக்கை
மற்றவற்கோ
இது வேடிக்கை

வேடிக்கை வாடிக்கை
ஆகலாம்
என்னோடு நீ
வரும் நாள்
வெறும் காட்சி ஆகாமல்
காலம் வெல்லுமா

உன்னோடு நானிருந்தால்.....

Offline MyNa

Re: உன்னுடன் நானிருந்தால்
« Reply #1 on: December 25, 2017, 08:40:40 AM »
vanakam sunrise :)
kavithai super..
intha varigal semmaiya iruku ..
  :)


தேடாதோ உன்
இரு விழி என்னைத்
தேடாதோ.
தீராதோ
உன்னைத் தேடித்தேடியே
என் விழியின் வலி
தீராதோ.
பாடாதோ
காதல் ராகத்தை
உன் மனம் பாடாதோ.

என் காதலை
உன்னிடம்
சொல்ல முனைவதும்
அதனை நீ
மறுப்பதும்
வாடிக்கை
மற்றவற்கோ
இது வேடிக்கை

Offline SweeTie

Re: உன்னுடன் நானிருந்தால்
« Reply #2 on: December 26, 2017, 03:41:49 AM »
சன்  எங்கே காணாமல் போனீர்கள்.?   கவிதை சிறப்பு.  வாழ்த்துக்கள்.