எனக்குப் பிடித்தக் கவிதை!
மொட்டை வெய்யில் அலைச்சல்
எழுதி குவித்த நூறு அப்ளிகேசன்கள்
பதில் சொல்லி அலுத்த ஆயிரம் இன்டர்வ்யூ கேள்விகள்
தோல்விகளையெல்லாம் வெற்றியின்
படிக்கற்களாக மாற்றிட நினைத்தாலும்
ஒவ்வொரு முறையும் கூசித்தான் போகிறேன்
“இன்னும் கொஞ்சம் சாதம் போடுமா!” எனும் பொழுது.-shuhaib