Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்!
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்! (Read 1312 times)
Yousuf
Golden Member
Posts: 3159
Total likes: 47
Total likes: 47
Karma: +0/-0
Gender:
சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்!
«
on:
March 05, 2012, 09:09:09 PM »
சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்க உதவும் என்று அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு ஒன்று கூறுகின்றது.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் – நாளுக்கு மூன்று தடவையும் உணவுக்கு முன் 2 கிண்ணம் தண்ணீர் பருகினால் – சராசரியாக 5 இறாத்தல் எடை குறையலாம் என்று வேர்ஜீனியா மாநில விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக – 48 வயதாளிகளை இரண்டு பிரிவாகப் பிரித்து – அவர்கள் மீது 12 வார கால ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
நிறைய நீர் பருகுவது – கலொரி மட்டத் திருப்தியை ஒருவருக்குத் தருகின்ற போதிலும்- அளவுக்கு அதிகமாக நீர் பருகினால் – அதுவே பலத்த பிரச்சினையைத் தோற்றுவிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள்; எச்சரிக்கிறார்கள்.
பொஸ்ரன் நகர அமெரிக்க வேதியல் தேசிய அமர்வில் தங்கள் ஆய்வறிக்கையை ஆய்வாளர்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வு முயற்சியில் கலந்து கொண்ட அனைவரும் 55 இற்கும் 75 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருந்தார்கள்.
முதல் பிரிவினர் – குறைந்த பட்ச கலொரி உணவு உண்ட போதிலும் உணவுக்கு முன் மேலதிக நீர் பருகவில்லை.
இரண்டாவது பிரிவினரும் குறைந்த பட்ச கலொரி உணவே உண்டனர்.
ஆனால் – சாப்பிடுமுன் – 2 கிண்ணம் நீர் பருகினார்கள்.
12 வார கால ஆய்வுக் காலத்தில் – மேலதிக நீர் பருகியவர்கள் 15 புள்ளி 5 இறாத்தல் எடை குறைந்திருந்தார்கள்.
மற்றவர்கள் – 11 றாத்தலே குறைந்திருந்தார்கள்.
மத்திய மற்றும் முதிய வயதினரிடையே – மூன்று வேளையும் உணவுக்கு முன் 2 கிண்ணம் நீர் பருகக் கொடுத்து –ஆய்ந்து பார்த்த போது – ஒவ்வொரு உணவிலும் 75 – 90 கலொரி குறைவாக அவர்கள் உட்கொள்வது தெரிய வந்தது.
உணவில் கட்டுப்பாட்டையும் 2 கிண்ணம் நீரையும் இணைக்கும் போது – உடல் நலப் பாதிப்பில்லாத விளைவு ஏற்பட்டிருப்பதாக வேர்ஜினியா மருத்துவ ஆய்வு பீடப் பொறுப்பு விஞ்ஞானி பேராசிரியர் பிரெண்டா டேவி கூறுகின்றார்.
கலொரிஇல்லாத திரவமான நீரால் வயிற்றை நிரப்புவது இந்த விளைவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர் கருதுகின்றார்.
தாகம் வரும்போது – கலொரி அதிகமாக உள்ள இனிப்புச் சேர்க்கப்பட்ட பானங்களை விட பச்சைத் தண்ணீரைப் பருகுவது நல்லது என்று அவர் விதந்துரைக்கின்றார்.
உடல் எடையைக் கட்டுப்படுத்த இது மிகவும் உகந்த வழி என்றும் அவர் கூறுகின்றார்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
சாப்பாட்டுக்கு முன் நீர் பருகுவது உடல் எடையைக் குறைக்கும்!