Author Topic: கடவுள் என்பது!  (Read 1450 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1078
  • Total likes: 3628
  • Total likes: 3628
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
கடவுள் என்பது!
« on: November 27, 2017, 01:04:05 PM »
வெள்ளை என்பது  நிறம்
கருப்பு என்பது காந்தம்
இயற்கை என்பது , அழகு
உணவு என்பது மருந்து
ஆடை என்பது  மானம் 
பணம் என்பது  தேவை 
ஆங்கிலம் என்பது மொழி
தமிழ் என்பது உயிர்
அம்மா என்பது  பாசம் 
அப்பா என்பது ஆசான்
குரு  என்பது உயர்வு
அன்பு என்பது உறவு
வேஷம்  என்பது விஷம்
காதல் என்பது போதை
ஆனந்தம்  என்பது ஆயுள்
கவலை என்பது  விரையம்
சினம் என்பது நோய்
துன்பம்  என்பது பரீட்சை
தோல்வி என்பது  பாடம்
வெற்றி என்பது தற்காலிகம்   
காமம் என்பது அமிர்தம்
நட்பு  என்பது  இளமை
குடும்பம் என்பது பற்று 
கர்மா என்பது தொடரும்
எண்ணம் என்பது வாழ்க்கை
உலகம்  என்பது மாயை
நான்  என்பது அறியாமை
இதில் ஏதும் இல்லை நிரந்தரம்
ஆன்மா  என்பதே நிஜம்
 இதை உணர்ந்துகொண்டால்
நீ. . . கடவுள்!

கடவுள் என்பது ..?
உன் தேடல்

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "