Author Topic: நீ...நான்...காதல்!!!  (Read 713 times)

Offline Anu

நீ...நான்...காதல்!!!
« on: February 29, 2012, 12:53:25 PM »
உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!

***

காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

*

என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

*

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

*
தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

*

உன் வருகைக்கு
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்டு
சென்ற
உன் கடைசி முத்தமும் தான்!!!

*

இது வரை
வெற்றிடமாய்
இருந்த
என்
இதயகூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை !!!

*

பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய் !!!