Author Topic: உனக்கே நீ வைக்கும் நெருப்பு  (Read 1100 times)

Offline thamilan

யோசித்துப் பார்
உன் பத்து விரல்களில்
இரண்டு விரல்கள் மட்டுமே - நீ
புகைபிடிப்பதை ஆதரிக்கின்றன

சிகரெட்டை சிகரெட்டாய் பார்க்காமல்
பாருங்கள்
வெள்ளைத்துணியால் மூடப்பட்ட
சடலம் போல தோன்றவில்லையா 
உங்களுக்கு

பொது இடங்களில்
பகையே இல்லாமல்
அடுத்தவர் மீது தொடுக்கும்
வன்முறையே புகைபிடித்தல்

வட்ட வட்டமாக நீ ஊதும்
புகையுடன் சேர்ந்து உன்
ஆயுசும் வெளியேறுவதை
நீ உணரவில்லையா
நீ உள்ளிழுத்து வெளிவிடும்
புகையின் நாற்றம்
உன் நுரைஈரல் கருகும் நாற்றம்
என நீ அறிவதே இல்லை

சிகரெட் புகையின்
வளையங்களில் சிக்கி
மீளமுடியாமல் போனால்
நுரைஈரல்
சாம்பல் கிண்ணமாகிப் போவது
நிச்சயம்

சிகரெட் உயிரை கொல்லும்
என தெரிந்தே அதை
வெறுமனே சிகரெட்டின் அட்டைபெட்டியின் மேல்
எழுதி வைக்கும் அரசாங்கமே
உயிரை கொல்லும்  அதன் உற்பத்தியை
நிறுத்தினால் என்ன!!!!!

« Last Edit: September 13, 2017, 01:34:10 PM by thamilan »