விதியை நம்பி
மதியை இழக்கும் மனிதா
விதி என்று ஒன்று உண்டா?
உன் மதியை துலக்கிப் பார்
எல்லாம் தலைவிதிப்படி தான் நடக்கும்
இது தேசியப் புலம்பல்
இறைவன் எவன் தலையிலும்
எதையும் எழுதவில்லை.
தலைவிதி என்று எதும் இல்லை
மாறாக
பொதுவிதி என்று ஒன்றுண்டு
கல்லில் கால் பட்டால்
காலுக்கு வலிக்கும்
இது தலைவிதி அல்ல
கல்லில் கால்பட்டு
கால் வலிக்க வேண்டுமென
இறைவன் யார் தலையிலும்
எழுத மாட்டான்
ஒருவன் பாவம் செய்திருந்தால்
அவன் துன்பப்பட வேண்டும் என
இறைவன் எழுதி இருப்பான்
என்று கூறலாம்
அப்படியானால் அவன்
துன்பப்படுவதற்கு காரணம்
அவன் பாவமே அன்றி
விதி அல்ல
எந்த திடப்பொருளுடனும்
மென்பொருள் மோதினால்
மென்பொருளுக்கு பாதிப்பு ஏற்படும்
இது பொதுவிதி
எல்லா செயலுக்கும்
எதிர்விளைவு உண்டு
அதை தான் நாம்
தலைவிதி என்கிறோம்
நல்லதை நினைப்பவனுக்கு
நல்லதே நடக்கிறது.
தீயதை நினைப்பவனுக்கு
தீமையே நடக்கிறது
இது அவன் விளைவுக்கு
எதிர் விளைவு
மதியை நம்புங்கள்
விதி தானே மாறும்