மனிதனாக பிறந்ததை விட
பறவையாக பிறத்தல் மேல்
அவற்றுக்கு இருக்கும் சுதந்திரம்
நமக்கு இல்லை
அவை வாழ்நாள் எல்லாம் உழைத்து
சொத்து சுகம் சேர்ப்பதில்லை
அவை அடுத்தவர் மனதை
சிதைப்பதில்ல்லை.
கூட இருந்ததே
குழி பறிப்பதில்ல்லை
பந்தம் பாசம்
சொந்தம் சுற்றம்
என்ற எந்த தழைகளும்
அவற்றுக்கு இல்லை
அவை காதலிப்பதும் இல்லை
காதல் தோல்வியால்
மனமுடைந்து கண்ணீர் விடுவதுமில்லை
ஆயிரம் கடவுள்கள்
அதற்கு இல்லை
கடவுளின் பெயரால்
யாரயும் ஏமாற்றுவதும் இல்லை
ஜாதி மதம் அதற்கில்லை
எந்த அரசியல் கட்சிகளும்
அவற்றுக்கு இல்லை
நிர்வாணம் அவற்றுக்கு
அசிங்கமும் இல்லை
அரைகுறை ஆடைகள் அணிந்து
அவலட்சணமாய் திரிவதும் இல்லை
எல்லாம் இருக்கும் நம்மிடம்
நிம்மதி இல்லை
எதுவும் இல்லாத பறவைகளுக்கு
நிம்மதியை தவிர வேறெதும் இல்லை