Author Topic: ஈரல் மிளகுத்தூள் வறுவல்  (Read 1479 times)

Offline RemO

ஆட்டு ஈரல் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு. இது மென்மையாக இருப்பதால் சிறுகுழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். நல்லெண்ணெயில் வேகவைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும்.


ஈரல் - 500 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்

பச்சை மிளகாய் – 2

வர மிளகாய் – 4

மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

நல்லெண்ணை - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு


முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும், அதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். அதன்பின் அடுப்பை பற்ற வைக்கவேண்டும். அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு வேக வைக்கவும். அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மையாக இருக்கும்.

ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேகவிடவும். அவ்வப்போது கரண்டி போட்டு கிளறவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிடவும். அதன் மீது கொத்தமல்லி தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.