தமிழில் பேசும், எழுதும் யாவரையும் நாம் தமிழர்களாகவும் (தாயக தமிழர்கள் இந்தியர்களாகவும்) நினைத்து கொள்கிறோம். ஆனால் வலைப்பதிவுகள் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்று இத்தகைய பயங்கரவாதிகள் வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக பேச திராவிட இயக்கங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்கின்றனர். நன்றாக ஞாபகம் வைத்து கொள்ளுங்கள் இவர்களுக்கு தமிழர்களுக்கு ஆதரவாக பேசும் எண்ணம் என்று எதுவும் கிடையாது. தமிழகத்தை இந்தியாவிலிருந்து கூறு போட வேண்டும் என்பது தான் இலட்சியம். இத்தகைய செயல் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை கேரளா, அஸ்ஸாம், காஷ்மீர் என நீக்கமற நிறைந்துள்ளது.
தமிழர்களுக்கு ஆதரவாக ஆரம்பித்த சுயமரியாதை இயக்கம், இன்று தவறானவர்கள் கையில் சிக்கி சீரழிகிறது. இது குறிப்பிட்ட மதத்தினருக்கு, குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான இயக்கமாக மாற்ற பட்டு விட்டது. இன்று வலைபதிவிற்கு தூய தமிழ் பெயரை இட்டு கொண்டு, பெரியார் படத்தை போட்டு கொண்டால் போதும்,
இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசலாம்.
பார்ப்பணீயம், தலித்தியம், தேவரியம், வன்னியரியம், கவுண்டரியம் என்று கூறி திட்டமிட்டு தமிழர்களை ஒன்று சேரவிடாமல் குழி பறிக்கலாம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினால் கூட இது உள்நாட்டு இந்து, முஸ்லிம் பிரச்சிணை என்று திசை திருப்பி விடலாம்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக, உலகின் சிறப்பு வாய்ந்த பாராளுமன்றத்தை தாக்கிய ஒரு பயங்கரவாதியை கூட நிரபராதி என்று பிரச்சாரம் செய்து கொள்ளலாம்.
"மதசார்பின்மை என்பது எந்த ஒரு மதத்தையும் எதிர்ப்பது அல்ல. தன்னுடைய மதத்தின் தூய கருத்துக்களை ஒழுங்காக பின்பற்றி கொண்டு பிற மதத்தினருடன் இணங்கி வாழ்வதாகும்."
"பகுத்தறிவு என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர்கள் கூறியதை கிளிப்பிள்ளை போல திரும்ப கூறுவதில்லை. இன்றைய சூழலிருந்து மனிதர்களை ஏற்றமிகு வாழ்விற்கு கொண்டு செல்ல தேவையான கருத்துக்களை முன் வைத்தல்."
வாருங்கள் இத்தகைய பொலி மதசார்பின்மை வாதிகளை புறக்கணிப்போம். தேசிய நீரோட்டத்தில் ஒன்று படுவோம்.
உலக தீவிரவாதமும் போலி மதசார்பின்மையும்
லண்டன், அமெரிக்கா, நைஜீரியா, சூடான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ருவாண்டா, எகிப்து, காம்பியா, சுவாஸிலெண்ட் முதல் கொண்டு உலகம் முழுவதும் தீவிரவாதம் பரப்புவது இந்து முஸ்லிம் பிரச்சினையா?
இப்பயங்கரவாதம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இடையே உலகம் முழுவதும் நடை பெற்று கொண்டுள்ளது.