Author Topic: ~ சைனீஸ் எக் நூடுல்ஸ் ~  (Read 355 times)

Offline MysteRy

~ சைனீஸ் எக் நூடுல்ஸ் ~
« on: July 05, 2017, 11:26:01 PM »
சைனீஸ் எக் நூடுல்ஸ்



தேவையான பொருட்கள்

நூடுல்ஸ்                –      1 பாக்கெட்

முட்டை                 –      3 – 4

பூண்டு                  –      2 பெரிய பற்கள்

நட்சத்திர சோம்பு         –      1

பச்சை மிளகாய்         –      3 – 4

நல்ல மிளகு தூள்      –      தேவையான அளவு

வினிகர்                 –      1 தேக்கரண்டி

எண்ணெய்              –      தேவையான அளவு

தேவைப்பட்டால் 1/2 கப்  குடைமிளகாய் , 1-2 வெங்காயம், 1 காரட், சோயா சாஸ் அல்லது தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்


செய்முறை

முதலில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும்

பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும்

பின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டுஅதனுடன் பச்சை மிளகாய் பூண்டு  நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும்.பின்பு அதனுடன் குடை மிளகாய் வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்

காய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை ஒரு ஓரமாக வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும்.

முட்டையை லேசாக கிளறி விடவும்

முட்டை வெந்தவுடன் வினிகர், நல்ல மிளகு தூள் மற்றும் ஏதாவது சாஸ் அல்லது மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு நூடுல்ஸ், நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்

பின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்

எக் நுடுல்ஸ் ரெடி