Author Topic: ~ ஓட்ஸ் பனீர் பாயசம் ~  (Read 412 times)

Offline MysteRy

~ ஓட்ஸ் பனீர் பாயசம் ~
« on: July 04, 2017, 11:29:51 PM »
ஓட்ஸ் பனீர் பாயசம்



ஓட்ஸ் – அரை கப்
கண்டன்ஸ்டு மில்க் – கால் கப்
பால் – 3 கப்
துருவிய பனீர் – கால் கப்
பாதாம், முந்திரி – தலா 10
கசகசா – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்


பாதாமை எடுத்து வெந்நீரில் போட்டு ஊறவைத்து தோல் நீக்கி வைக்கவும். முந்திரி, கசகசாவை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். இந்த மூன்றையும் நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, அடுப்பை சிம்மில் வைத்து, ஓட்ஸை சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த பின் அரைத்த வைத்த விழுது, சர்க்கரை சேர்த்துக் கலக்கி, இறக்கும் போது கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து இறக்கவும். துருவிய பனீரை நெய்யில் வறுத்து தூவி பரிமாறவும்.