முதலில், உங்களின் சருமத்தின் தன்மையை தெரிந்து, அதற்கேற்ற, பொருத்தமான சோப்பை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் பசை உள்ள சருமம் மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு, கிளிசரின் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்பை பயன்படுத்தலாம். குளிர் காலத்தில், மாயிச்சரைச்சர் அதிகமுள்ள சோப்பையும், வெயில் நாட்களில், எழுமிச்சை கலந்த சோப்பையும் பயன்படுத்தலாம். அதிக வாசனை உள்ள சோப்புகள், தரமானவை என்று அர்த்தமல்ல. ரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க, கொழுப்பின் வாசனையை தவிர்க்கவே, அதிக மணமும், நிறமும் சேர்க்கப்படுகிறது. எனவே, மிதமான வாசனை உள்ள சோப்பே, சருமத்துக்கு நல்லது.
சோப்பு உபயோகிக்கும் போது...: அடிக்கடி சோப்பை மாற்றாதீர்கள். அப்படி மாற்றுவதால், புதிய சோப்புகள், அலர்ஜியை ஏற்படுத்தலாம். தினமும், இரண்டு முறை சோப்பு போட்டு முகம் கழுவினால் போதும். அடிக்கடி சோப்பு பயன்படுத்தினால், சருமம் வறண்டு போகச் செய்யும்.
சோப்பு ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு...: எந்த சோப்புமே ஒத்துக் கொள்ளாதவர்கள், கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன், பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். மூலிகைகள் அடங்கிய குளியல் பொடிகளை பயன்படுத்தலாம்.