Author Topic: உறவுகள்  (Read 499 times)

Offline AYaNa

உறவுகள்
« on: June 06, 2017, 05:07:08 PM »
பிறப்பின் பிணைப்பு
நம்
பிரச்சினைகளின்
இலவச
இணைப்பு.....தமிழ்
தந்த
சிறப்பு இந்த
உறவுகள்.....!!  :) :) :)

உறவுக்குள :
விரிசல்.....
உள்ளுக்குள்
உட்பூசல்....
வீடு வாசல்
தேடிவரும்
உறவுகளும்....
தேடிவராத
உறவுகளும்......
வாங்கிய
பெயர்
உறவுகள்......!!  :'( :'( :'(

தலைமகன்
தலைமகள்
என்றும்....
கடைசியில்
கடைக்குட்டி
என்றும்......
கட்டம்
கட்டி.....வாழும்
ஒரு
கூட்டம்
வாங்கும்
பெயர்
உறவுகள்......!!  :-[ :-[ :-[

காதல் என்றும்
கல்யாணம்
என்றும்.......
மோதல்
முடிவு
என்றும்......
முட்டி மோதி
வெட்டிப்போகும்
வீம்பு வளர்க்கும்
கூட்டம்
அதுவும்
உறவுகள்.......!!  ;) ;) ;)

வேடிக்கை
பார்த்து
சோடித்துக்
கதைபேசி
மனசை
நோகடித்துப்
பார்க்கும்
நீதியற்ற
மனிதர்கள்
அவர்களும்
உறவுகள்.......!!  :-\ :-\ :-\

கண்ணீரும்
கம்பலையுமாய்
காலம்
போக்கும்
கலிகாலக்
குடும்ப
வாழ்க்கை......
கையேந்து
நிலையில்
இருந்தாலும்
கண்டுகொள்ளாத
இவ்வுலகம்
சுமந்து
கொண்டு
சுற்றுது
உறவுகளை......!!  :-[ :-[ :-[

போலியான
பூச்சரங்களால்
அசிங்கங்களை
அலங்கரித்துக்கொண்டு
அகங்கார
சிரிப்பில்
அகம்
மகிழுந்து.....
போலியாய்
வாழும்
உறவுகள் ......!!!  ??? ??? ???

கடவுள்
சிலைகளும்
களவுபோகும்
காலத்தில்.....
கல் மட்டுமே
கடவுளைக் காப்பாற்றும்.....
கல்லே
கடவுள்.....என்று
நம்பிய
உறவுகளால்......!! >:( >:( >:( >:(

Offline ChuMMa

Re: உறவுகள்
« Reply #1 on: June 06, 2017, 05:34:19 PM »
கல்லே
கடவுள்.....என்று
நம்பிய
உறவுகளால்

மயிலு உன் மூளை குள்ள இம்புட்டு அறிவா ?!

வாழ்த்துக்கள் அருமையான வரிகள் வலிகள் கொண்ட கவிதை

தொடர்ந்து எழுதுங்கள் சகோ
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline SunRisE

Re: உறவுகள்
« Reply #2 on: June 07, 2017, 01:16:47 AM »
Uravugal eppothum inippathillai
Thaalnthaal pesum
Vaazhthaalum pesum

Arumaiyana. Varigal
போலியான
பூச்சரங்களால்
அசிங்கங்களை
அலங்கரித்துக்கொண்டு
அகங்கார
சிரிப்பில்
அகம்
மகிழுந்து.....
போலியாய்
வாழும்
உறவுகள் ......!!!  ??? ??? ???

Vazhthukkal kavithayini machi