விரிந்த சிறகோடு
விட்டத்தில் தொங்கியும்
பறக்க முடியாத
விஞ்ஞான படைப்பு
இரும்பு கம்பியின் இடையில் சிக்கிய
காந்தவிசையதன்
செப்போடு சேரும் காதல் ஆசையோ
சுற்றவிட்டு வேடிக்க பார்ப்பது
வெளிவரும் காற்றோடும்
வெகுநேர உறவில்லை
வேறென்ன நிரந்தரம்
இந்த விளையாட்டு தினம்! தினம்!
கோடையில் கொஞ்சிடவே
மீண்டும் மீண்டும் மின்விசறி...
சக்திராகவா