Author Topic: கொத்தமல்லி சேமியா  (Read 1335 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கொத்தமல்லி சேமியா
« on: February 17, 2012, 05:28:08 PM »
தேவையான பொருட்கள் :

சேமியா - 1 கப்
கொத்த மல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழசாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை :

1. நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள்.

2. 6 கப் தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேகவிட்டு வடியுங்கள்.

3. எண்ணையை காயவைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த கொத்தமல்லி தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற விட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

4. கடாயில் நெய்யை காயவைத்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, வறுத்து அரைத்த விழுதை சேருங்கள்.

5. இந்த விழுதுடன் உப்பை தேவையான அளவு சேருங்கள். அதனுடன் வடித்து வைத்த சேமியாவை சேர்த்து நன்கு கலக்குங்கள். கொத்தமல்லி சேமியா ரெடி.


குறிப்பு :

எப்போதுமே சேமியாவை வேகவைக்கும் போது, தண்ணீர் நன்கு கொதித்தப் பின்னர் தான் சேமியாவை சேர்க்க வேண்டும். அப்போது தான் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நன்கு வேகும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்