சகோ
உங்கள் கவிதை இல்லா ஓவியம் உயிராகிறது
மலரில்லா பெண்ணின் கூந்தல் போல்
மனமில்லை
சகோ, கவிஞன் படைக்கும் படைப்புக்கு
அர்த்தம் கற்பிக்க யாராலும் முடியாது அவனை தவிர
கொச்சை என்று உதறி தள்ளும் நாம்
நம்கண்ணாடி வீட்டில் கல் எரிந்து கொள்வதற்கு ஒப்பாகும்
உங்கள் படைப்புக்கு பண்பலையில் இடம் இல்லாமல்
இருக்கலாம் ஆனால் பல மைல்கள் கடந்து எங்கள்
மனதில் இடம் உண்டு
நண்பர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்படுவது
இயற்கை , அதை கடந்து வருவோம் மறந்து வருவோம்
பெண் புரிந்து கொள்ள முடியா புதிர் தான்
புரிந்துவிட்டால் வாழ்க்கை இன்பமாய் மாறிவிடும்
கவிதை தொடர்ந்து பதிவிடுங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள்
நன்றி