Author Topic: அன்னையர் தினம் வாழ்த்துக்கள்  (Read 613 times)

Offline SunRisE

அன்னை அவர்களுக்கு
ஒரு தினம்
மட்டும் போதுமா?

என் அன்னை அவள்
பத்து மதம்
சுமந்த பொது
ஏன் உன்னை சுமக்கின்றேன்
என்று
நாட்களை எண்ணியதில்லை

பத்து மாதத்தை
அவள் ஓவ்வொரு வினாடியும்
எண்ணிக்கொண்டே இருப்பாள்
எப்போது சுமை இறங்கும் என்பதற்கல்ல
மகனோ மகளோ
பூந்தளிர் பூமுகம்
உச்சி முகர்ந்து
கட்டியணைத்து
மடித்தனில்
அமுதம் பானம் புகட்டிட

வாலிப வயது
வந்தபோதும்
பிள்ளைகள் தான் வளர்ந்து விட்டனவே
என விட்டுவிடுவதில்லை
முதல் எழுத்து முதல்
முறைவாசல் வரை
இதுதான் உலகம்
இதுதான் நியதி என
பாடம் புகட்டுவள்
விடுமுறை இன்றி

தாயை போல பிள்ளை
நூலை போல சீலை
என்றுதான்  சொல்வர்
எத்தனை கல்வி
கற்றாலும்
தாயின் வளர்ப்புக்கல்வி
மட்டுமே முன்னோடி

தனக்கு மகன் செய்வான்
தனக்கு மகள் செய்வாள்
என்றெண்ணி
எந்த தாயும் எண்ணுவதில்லை
அவர்கள் நலமாக
வளமாக வாழ வேண்டும்
என்று எண்ணி
உயிர்விடும் அன்னைக்கு
ஒரு தினம்
மட்டும் போதுமா?

நித்தம் வாங்குவேன்
அன்னையே
சொர்கம் தேடும்
மானிடரே
தாயின் பாதம்
தொட்டு வணங்குங்கள்
சொர்கம் உண்டு நிச்சயம்
இம்மையிலும் மறுமையிலும்
வணங்குறேன் தாயே.

Offline MyNa

Vanakam piriyan..

அன்னை அவர்களுக்கு
ஒரு தினம்
மட்டும் போதுமா?


motha kavithaiyin karuthai intha varigalil unarthitinga..Annaiyar thinam nu inaiku oru naal mattum avangala thaanguratha vida thinam oru 10 nimisham avangalukaaga othuki naalu varthai manasaara pesina atha vida santhosam oru thaaiku vera enna iruka mudiyum..

Arumaiyana kavithai piriyan.. vazhthukal

Offline SunRisE

சகோதரி மைனா,
சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி
தாயின் உறவு இல்லாதவர்க்கு தான் புரியும்
நான் என் தாயை இழந்து வாடுகின்றேன்
அவர்களின் தியாகம்
நினைவு கூற வாழ்த்த
ஒரு நாள் மட்டும் போதாது
தினமும் யாசிக்க வேண்டும்
தினமும் பூஜிக்க வேண்டும்
அது கூட தீராது
பெற்ற கடனுக்கு.

நன்றி சகோதரி

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Sun bro :) ungaloda eakam puriyuthu bro :( aanalum unga amma oda blessing ungaluku eppovum irukum :)

தனக்கு மகன் செய்வான்
தனக்கு மகள் செய்வாள்
என்றெண்ணி
எந்த தாயும் எண்ணுவதில்லை
அவர்கள் நலமாக
வளமாக வாழ வேண்டும்
என்று எண்ணி
உயிர்விடும் அன்னைக்கு
ஒரு தினம்
மட்டும் போதுமா?

Eppavume poi agatha varigal bro ithu :D Amma va mathiri ulagathula yarum iruka matanga :) nalla unarvu poorvamana oru kavithaiya thantha ungaluku nandri bro

Offline SunRisE

சகோதரி விபூர்த்தி,
நன்றி உங்கள்
வாழ்த்துக்கு

தாயின் மறு உருவம் சகோதரி
உங்களைப்போன்ற சகோதரிகளின்
அன்பில் அன்னையை பார்க்கிறேன்

நன்றி சகோதரி

Offline SwarNa

sun
azagana kavithai .ammavoda anbu epovum unga koodathan irukum .kavalai vendam :)

Offline SunRisE

Swarna

Mikka nanri sagothari.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் சகோதரா

அம்மா அன்பின் ஆழி
அம்மாவே வாழ்க்கை


அம்மா எனும் புனிதம்
பலர் உணராதது
பாவம் உலகில்


உணர்ந்த உங்கள் இதயம்
அம்மாவை பலருக்கு
உணர்த்தட்டும் சகோதரா


வலிகள் கண்டேன்
உள்ளமதை உணர்ந்தேன்
ஆறுதலுக்கு மொழியில்லை
கடவுளை வேண்டுகின்றேன்


என்றும் நலமே நிலைக்க
வாழ்த்துகின்றேன் சகோதரா நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SweeTie

உங்கள்  அன்னை எங்கிருந்தாலும்  உங்களை வாழ்த்திக்கொண்டேதான்  இருப்பார்கள்.    வாழ்த்துக்கள்

Offline SunRisE

சகோதரன் சரிடன்

உங்கள் வாழ்த்துக்கும்  பாராட்டுக்கும் மிக்க  நன்றி

Offline SunRisE

தோழி ஸ்வீட்டி,

மிக்க மகிழ்ச்சி உங்கள் அன்பிற்கு