உயிர்வாழ ஆதாரம் நீயே மழையே
உலக நீர் நிலைகளின்
அடிப்படை
ஆதாரம் நீயே மழையே
உன்னிலும் உயர்வாய்
சுத்தமானவை எவையும்
இல்லை உலகில் மழையே
நதி அருவி ஆறு ஏரி குளம்
கால்வாய் கம்மாய் குட்டை
குண்று பள்ளம் தேக்கம் மதகு
வரப்பு கிணறு கேணி ஓடை
அணை நீர்வீழ்ச்சி வாய்க்கால்
பீலியெனவும்
எங்கே பய்ந்தாலும்
எங்கே ஓடினாலும்
எங்கே தேங்கினாலும்
உன்னை அன்றி யார் இருப்பார்
அங்கே மழையே
கடலிலும் நீயுண்டே நல்மழையே
அனைத்தின் காத்திருப்புக்கும்
அர்த்தமாவாய் மழையே நீ
மனிதர் மிருகம் பறவை
மரங்கள் நுண்ணுயிர்கள்
அனைத்துக்கும் இலவச
உயிர் நீ மழை நீரே
கற்கும் பருவத்தில்
அடைமழையாய் நீ வேண்டும்
பள்ளிக்கு விடுப்பெடுக்க
விளையாட சென்றால்
வேண்டவே வேண்டாம்
உபத்திரவம் நீ
சுற்றுலா சென்றால் நீ
சத்துரு மழையே
எம் எண்ணம் போலன்றி
நீ வந்தால் மழையே
எத்தனை வசைகள் உனக்கு
சனியன் தரித்திரியம் மூதேவி
கால நேரம் தெரியாமல்
வருகிறாயேயென
சனியன்
நான் கூட திட்டியுள்ளேன்
இறவரமாம் உன்னை
சனியனென
விவசாயிக்கு நீ வேண்டும்
பருவத்தே பயிர்செய்ய
பருவம் தப்பி எமனாய்
வேண்டாம் நீ மழையே
உயர்திணை அஃறிணை
அனைத்துக்கும் நீ வேண்டும்
எப்போதும் உயிர் வாழ
பெருவெள்ளமாயன்றி
நீ வேண்டும் மழையே
இறைவரமாய் சீற்றமின்றி
விவசாயி மழைக்கேங்க
துடுப்பாட்ட சூதாட்டத்துக்காய்
மழைவர வேண்டாமெனும்
வரம் கேட்க்கும் நாமெல்லாம்
மனித நேயம் கொண்ட மனிதர்கள்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே