என் கனவில் பேய் ஒன்று
என் கனவில் பேய் ஒன்று
தித்தமும் வரும் பகலில்
பாவமென பேய்க்கும்
இரங்கினேன்
பேயோ பழக பழக
அடிமை செய்தது
என் இரக்க குணத்தை
பொறுத்து போனேன்
புரிந்துகொள்வதாய் இல்லை
கோரமாய் தோன்றி
மிரட்டுகிறது
புனிதமெல்லாம் பேசாதே
கடவுள் எல்லாம் பொய்
தூசணம் கொண்டு பாடுயெனை
உலகமெல்லாம் தன்மயமேயென
பேய்க்கும் இரங்கும்
குணமெனக்கு பாவமென
பேயதனை உணர்வதில்லை
ஏனென்றால் பேயது
உலகமெல்லாம் உன்மயமே
உண்மை எனவேதான்
நீதிக்கும் உண்மைக்கும்
இடமற்று போனது
உனக்காய் இரங்கியது போதுமெனி
போய்விடு
இல்லையேல்
பொல்லாப்பு உனக்கு வரும் அவதானம்
உன்னை விரட்டும் சக்தி எனக்குண்டு
உன் ஆட்டம் நிலைக்காது நிரந்தரமாய்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே