அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
நண்பனின் ஆழமான அன்பின் நட்பு.....
அவனிடமும் பாதணி இல்லை.....
எனக்கோ கழட்டிய இடத்தில்
பாதரட்சையை மறக்கும் பழக்கம்.....
கடக்கும் புதரில் முள் என்றேன்
முள்ளின்மேல் காலை வைத்தவன்
தன்காலின்மேல்,,,,,
என் காலை வைத்து... வாவென்றான்,,,,,
அவனை பெற்றவள்,,,,,
என் வீட்டில் வேலைக்காரி,,,
என்னை நீராட்டி,,, அலங்கரித்து,,,,,
உணவு தீத்தையில் அன்னையவள்,,,,,
நண்பனை என் தங்கை காதலித்தாள்
என்ன செய்வேன்,,,,,
என் தோழனை உன்னதன் உத்தமனென
என்வீட்டிலே புகழ்ந்தவன் நான்,,,,,
புகழத் தகுதியும் உள்ளவன் அவன்,,,,,
வசதி இல்லாதவன்,,,,,
இல்லாமையிலும்,,,,,
உள்ளவர் கொண்டிடா நல்லுள்ளம் கொண்டவன்,,,,,
பெருமிதமாய் நற்சான்று கொடுத்தவன் நான்.....
அண்ணனென் வாக்குமூலத்தை,,,,,
தெய்வீகமாய் கருதி,,,,,
என் தோழனை தனது வாழ்வென எண்ணி,,,,,
காதல் கொண்டாள் தங்கை,,,,,
தவறுதானென்ன கண்டோம் இங்கே,,,,,
எங்கேயோ! யோரோ! எப்படியானவனோ!
எதையுமே அறிந்திட முடியும்,,,,,
உணர்ந்திட முடியாது,,,,,
இயல்புகளை உணரமுடியா
வாழ்க்கைத் துணையுடன்,,,
என் தங்கை மாளிகையில் வாழ்வதிலும்,,,,,
நல்லவன்,,, நேர்மையானவன்,,,,,
ஏழைதான்,,,,,
அன்பான இதயம் கொண்டவன்,,,,,
என் தோழனின் இயல்புகள்,,,,,
விலைமதிப்பில்லாதவை,,,,,
என் தங்கையின் காதலை,,,,,
மரணம்வரை மரணிக்காது,,,,,, காக்க வல்லவன்,,,,,
மகிழ்ச்சியாய் வாழ்வாழ் தங்கை,,,,,
நல்லதொரு அண்ணனாய்,,,,,
தோழனின் பாதம் கழுவி,,,,,
வாழ்த்துகின்றேன்,,,,,
வாழ்க வளமுடன் பல்லாண்டு.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே