ஜன்னலோரம் ஒரு கனவு....
ஜில்லென்று தென்றல் என்னைத்
தழுவிச் செல்ல....
துளித் துளியாய்ச் சிந்திடும்
மழைச் சாரல் துளியாய் என்னை
நனைத்திட....
மனமும் அமைதியெனும்
பொக்கிஷத்தை
நாடுமே
இரு விழிகளும் உத்தரவின்றி
இமைகளை மூடுமே
போர் கொண்ட மனமும்
சாந்தமின்றி பொங்கிக்
கிடக்க....
வேதனைகள் மற்றோர்
அறிவாரோ...
தோள் கொடுத்திடத் தான்
எவருமுண்டோ...
இறைவன் எழுதிய
விதியோ...
அல்ல மதியால் வந்த
வினையோ...
செய்த தவறுகள்
விடாப்பிடி கொண்ட
வேதாளமோ....
செய்யா குற்றத்துக்கும்
பழியேந்தி நிற்கின்றது....
காலம் மாறிடுமா...
காயங்கள் மறைந்து ...
எரிமலை போல் கிடந்திடும்
மனமும் பனிமலையாய் மாறிடுமோ....
அணைகடந்த வெள்ளம்...
கதறித் தான் பயனுண்டோ...
ஒரு கணம் நினைக்கையில்
கதறிடும் மனம்....
இமைகள் திறக்கையில்
விழியோரம் கசிந்த
ஒரு துளி கண்ணீர்...
நனைத்த மழைச்சாரலில்
துளியோடு துளியாய் கலந்தது...
ஜன்னலோரம் கொண்ட
கனவு...
கனவாகவே திக்கற்று
நிற்கிறது....!!!
~ !! ஜெ.ரித்திகா !! ~