Author Topic: ~ கத்திரிக்காய் தயிர் பச்சடி ~  (Read 353 times)

Offline MysteRy

கத்திரிக்காய் தயிர் பச்சடி



தேவையானவை:

 சிறிய கத்திரிக்காய் - 4, புளிக்காத புது தயிர் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பூண்டு - 2 பல், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

 கத்திரிக்காயை நீளவாக்கில் மிகவும் மெல்லியதாக நறுக்கவும். தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பூண்டை தோலுரித்து நசுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய கத்திரிக்காய் துண்டுகளை சிறிது சிறிதாகப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். அவற்றை டிஷ்யூ பேப்பரில் போட்டு, அதிகப்படியான  எண்ணெயை எடுத்துவிடவும். பரிமாறும் சமயத்தில் பொரித்த கத்திரிக்காய், அரைத்த தேங்காய் விழுது, நசுக்கிய பூண்டு, உப்பு ஆகியவற்றை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து... கடுகை தாளித்துச் சேர்க்கவும்.

இந்தத் தயிர் பச்சடி, வித்தியாசமான ருசியில் ஆளை அசத்தும்.