Author Topic: வாசனைத் தைலங்கள்... சில யோசனைகள்!  (Read 879 times)

Offline RemO

பண்டைய காலங்களில் அத்தர், ஜவ்வாது போன்றவைதான் மணம் தரும் வாசனைப் பொருட்களாக இருந்தன. வியர்வை வாசம் போக்குவதோடு மட்டுமல்லாது மனம் மயக்கும் பொருட்களாகவும் இருந்தன. இன்றைக்கு மேல்தட்டு வர்கத்தினர் மட்டுமல்லாது அலுவலகம் செல்லும் பெரும்பான்மையோர் பெர்ப்யூம் உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர். எந்த மாதிரியான பெர்ப்யூம் உபயோகிப்பது என்று அழகுக்கலை நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக.

வாசனைப் பொருட்களை உபயோகிக்கும் போது முதலில் மணிக்கட்டு, இதயத்தின் நடுப்பகுதி, முழங்கை, காது பின்பகுதி போன்ற பகுதிகளில் லேசாக தடவலாம். வாசனை ஆளைத் தூக்கும்.

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், போன்றவற்றிர்க்கு ஏற்ப பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் கருப்பான சருமம் உள்ளவர்களும், சிவந்த நிறம் உள்ளவர்களும் அதற்கேற்ப தனியான பெர்ப்யூம் தேர்ந்தெடுக்கவேண்டும்.

சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.

அலர்ஜியில் கவனம்

எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை கவலைப்படாமல் உபயோகிக்கலாம்.

சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது. சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.

Offline Yousuf

வாசனை திரவியங்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் ரெமோ. நான் கூட அத்தர் தான் பயன்படுத்திகிறேன்!

பதிவிற்கு நன்றி!

Offline RemO

thanks usf