அப்பாக்கள் விபச்சாரம்
பிள்ளைப் பருவம் தொலைத்த - குமரி
கன்னிப் பருவம் தொலைக்கும் இல்லமா
ராணியாக பருவம் பெயரும் வேளைவர!
காதலை கலைத்து தன்னெண்ணம்போல
மகளை கல்யாண காவுகொடுக்க
மானமுள்ள தகப்பன் முயன்றார்!
மரபறிந்தவள் தகப்பனை கேட்டாள்
மாதருள் மாணிக்கம் போல காத்து
மனது நோகா பெண்ணாய் வளர்த்து!
உள்ளத்தில் அகலா உயிர் தூங்க
உடலால் ஊடிவாழ்ந்து விபச்சாரம்
செய்திடல் தகுமே என்னப்பன் - பிள்ளையென!
ஆண்மை உருக தலைகள் குனிந்து
மகளை வளர்த்த மேன்மை புரிந்து
உள்ளம் மகிழ்ந்து நெகிழ்ந்து நெருட!
ஓங்கி அழுதார் வாழுமுடல் இங்கிருக்க
தன் எண்ணப்படி கொடுத்த தவறான
வாக்கை எண்ணி!
அப்பாக்கள் உணரல் வேண்டும்
கற்பு நெறிகொண்ட பாவையர்
காதல் பிரித்து ஒப்பிலார் உடல் - சேர்ப்பின்
அது விபச்சாரமெனும் உண்மை!
கற்புடை பாவை மனதில் அகலா
உயிரென காதலன் தூங்கையில்...
உள்ளம் ஒப்பிலா உடலோடு உடல்
ஊடினும் உவப்பில்லா இன்பமே...
காதல் பிரித்து ஒப்பிலார் உடல் - சேர்ப்பின்
அது விபச்சாரமெனும் உண்மை - அப்பாக்கள் உணர்க!
இத்தகை கொடுமை பெற்றவர் செய்வதால்
படுக்கையை கண்ணீரால் மூழ்கச்செய்யும்
காளையர் பாவையர் கோடி கோடியுண்டு நம்மில்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே