என் உடலின்
எடை கூடிவிட்டது
நீ என் இதயத்தில்
குடியேறியதால் ......
என் இரத்த அழுத்தம்
கூடி விட்டது
என் இரத்தத்தில் நீ
கலந்து விட்டதனால் .....
எனக்கு சக்கரை வியாதி
அடிக்கடி உன் பெயரை
உச்சரிப்பதனால் .....
மரத்தை விட்டு
பறவைகள் பறந்து போனாலும்
அதன் கிளைகளில்
எச்சங்களாக
நீ எனை மறந்து போனாலும்
மனமெங்கும் உனது நினைவுகள் ......