Author Topic: ~ பனீர் குடைமிளகாய் பராத்தா ~  (Read 344 times)

Offline MysteRy

பனீர் குடைமிளகாய் பராத்தா



கோதுமை மாவு – 2 கப்,
உப்பு, தண்ணீர் – தேவைக்கு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
பூரணத்திற்கு…
நறுக்கிய குடைமிளகாய் – 1/2 கப்,
துருவிய பனீர் – 1/2 கப்,
மிளகாய்தூள் – 1/2 கப்,
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்,
எண்ணெய்/நெய் – தேவைக்கு.

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து 20 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய பனீர், குடைமிளகாய், மிளகாய்தூள், மிளகுத் தூள், கரம்மசாலா, உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறவும். மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து சப்பாத்தி இட்டு அதனுள் பூரணம் வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தி இட்டு, சூடான கல்லில் எண்ணெய்/நெய் விட்டு, இருபுறம் வேகவிட்டு எடுக்கவும். ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.