ஐயா தமிழனுக்கு வணக்கம்,
காதலில் மறதி தற்செயலானது
காதலை வஞ்சித்தோர் உள்ளமும்
கண்களும் படும் வேதனைகள்
சொல்லிட முடியாதவை!
அலையெனும் இதயம்
காதலியாம் கரையிடம்
ஒட்டி செல்லும் ஈரம்
இரத்தமாய் கூட இருக்கலாம்
காதலெனும் அன்பு
அனுபவிக்கும் வேதனை
யார் அறிவார்?
காதலில் எப்போதும் பெண்கள்தான்
குற்றவாளிகளா? பாவம்!
குற்றவாளியும் அவளே
வலிகளும் அவளுக்கே!
கவிதை காதல் உணர்வின் படிப்பினை. நன்றி
வாழ்க வளமுடன்.