Author Topic: ~ பாசிப்பருப்பு சுகியன் தீபாவளி ரெசிபி ~  (Read 477 times)

Offline MysteRy

பாசிப்பருப்பு சுகியன் தீபாவளி ரெசிபி



தே.பொருட்கள்:

பாசிப்பருப்பு- 1/4 கப்
தேங்காய்த்துறுவல் – 1/2 கப்
வெல்லம்- 1/4 கப்
மைதா – 1/2 கப்
தோசை மாவு – 1 குழிக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – பொரிக்க
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*பாசிப்பருப்பை மலர வேகவைத்து நீரை வடிகட்டி மசிக்கவும் அல்லது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
*தேங்காய்த்துறுவல்+மசித்த பாசிப்பாருப்பை வெறும் கடாயில் லேசாக வதக்கவும்.
*வெல்லத்தில் சிறிது நீர் விட்டுக்காய்ச்சி மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.
*வடிகட்டிய வெல்லத்தில் பிசுப்பிசுப்பு பதம் வந்ததும் தெங்காய்த்துருவல்+பசிப்பருப்பு+ஏலக்காய் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.
*அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் மைதா+உப்பு+தோசைமாவு சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.
*பிடித்து வைத்த உருண்டைகளை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

பி.கு:

தோசை மாவு சேர்த்து கரைப்பதால் ரொம்ப மென்மையாக இருக்கும்.கடலைப்பருப்பில் செய்வதை விட பாசிப்பருப்பில் செய்தால் இன்னும் டேஸ்டாக இருக்கும்.தேங்காய்துறுவல்+பாசிப்பருப்பை நன்கு வதக்கினால் 2 நாள் வரை வைத்திருக்கலாம்