Author Topic: ~ எலுமிச்சை இறால் கிரேவி ~  (Read 328 times)

Offline MysteRy

எலுமிச்சை இறால் கிரேவி



தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் நறுக்கியது – 1 கப்
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1 மூடி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை:

இறாலைத் தோல் நீக்கி, சுத்தமாகக் கழுவிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயத்துடன், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கி ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
பின் இதனுடன், அரைத்து வைத்த கலவையைப் போட்டு வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாதூள் சேர்த்து கிளறவும். இது நன்கு வதங்கிய பின்னர் அதிலேயே எலுமிச்சை சாறு ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். இத்துடன் கழுவி வைத்த இறாலைப் போட்டு அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிடவும். இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அதிக கிரேவி பதம் வேண்டும் என்பவர்கள் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பத்து நிமிடத்தில் நாவில் நீர் ஊறச்செய்யும் எலுமிச்சை இறால் கிரேவி தயார்