Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குடல்புண்களை விரட்டும் சுண்டைக்காய் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ குடல்புண்களை விரட்டும் சுண்டைக்காய் ~ (Read 430 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 227481
Total likes: 29061
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ குடல்புண்களை விரட்டும் சுண்டைக்காய் ~
«
on:
November 06, 2016, 10:14:10 PM »
குடல்புண்களை விரட்டும் சுண்டைக்காய்
பார்வைக்கு சிறியதாக இருக்கும் இந்த சுண்டைக்காய் பல மருத்துவ உணங்களை உள்ளடக்கியது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய தேவையான வைட்டமின் சி-யை அதிகமாகக் கொண்டது. ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு. சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றன. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்
1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.
3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.
4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.
5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.
6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.
7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் பிரதானமக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.
8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.
9, உணவின் மூலம் நம் உடலுக்குள்சேர்கிற கிருமிகள் அமைதியாகஉள்ளே பல்வித பாதிப்புகளை உருவாக்கலாம். அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நச்சுக் கிருமிகள் உடலில் தங்குவது தவிர்க்கப்படும்.
10, சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி தினம் சிறிதளவு தண்ணீரில் கரைத்துக் குடித்து வந்தால், ஆசனவாய்த் தொற்றும், அதன் விளைவாக உண்டாகிற அரிப்பும் குணமாகும்.
11, வாரத்தில் 4 நாட்களுக்கு சுண்டைக்காய் சாப்பிடுகிறவர்களுக்கு, ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
12. சுண்டைக்காயைக் காய வைத்து, வற்றலாக்கி, சில துளிகள் எண்ணெய் விட்டு, வறுத்து சூடான சாதத்தில், பொடித்துச் சேர்த்து, ஒரு கவளம் சாப்பிட அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
13. வாயுப் பிடிப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து.
14. )பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.
15, பக்கவாதம் பாதித்தவர்களுக்குக்கூட சுண்டைக்காய் மெல்ல மெல்ல நிவாரணம் தரும் .
Logged
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ குடல்புண்களை விரட்டும் சுண்டைக்காய் ~