Author Topic: இந்திக்காரன்  (Read 561 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
இந்திக்காரன்
« on: October 22, 2016, 04:33:08 PM »
   அதிகம்
விளிக்கப்பட்டதில்லை
அவனது பெயர் .!
பொத்தாம்பொதுவாய்
இந்திக்காரன் என்கிற
பெயர் சுமந்தே
வலம் வருகிறான்..!
சமயங்களில்
மொழி மென்று
சாமர்த்தியமாய்
சாமான் விற்கும்
அண்ணாச்சி கூட
இந்திக்காரன் என்றே
அடையாளப்படுத்துவதுண்டு
அண்ணாச்சியின் இந்தியில்
அவ்வப்போது மிரளும்
அவன்
ஒருபோதும் சிரித்ததில்லை...
கலிங்கத்துப்போரென
தினம்தினம் நிகழும்
அண்ணாச்சிக்கும்
அவனுக்குமான மொழிப்போரில்
பெரும்பாலும் வெல்வது
அவனே....
பரணி மட்டுமே பாக்கி ..
எங்கேனும் திருட்டாயினும்
எங்கேனும் கற்பழிப்பாயினும்
அவன் மீது
பரவும் பார்வைகளில்
பயப்படுவதுண்டு.....
அரசாங்க அரிசி தின்றால்
காசு மிச்சமென்று
கருதிவரும் அவனிடத்தில்
இரட்டை லாபம் வைத்து
அரிசி விற்கும் உங்களுக்கு
அவன் வலி
புரியப்போவதில்லை...
அண்ணாச்சியின் புன்னகைக்கு
அர்த்தம் புரியப்போவதில்லை
அவனுக்கும் கூட...!
எப்போதேனும்
நீங்கள் இரவில் விழித்திருந்தால்
அவன் வீட்டுப்பக்கம்
போய்த்தான் பாருங்களேன்....
அலைபேசி
அழுகையுமா புரியாது உங்களுக்கு ...!

Offline Maran

Re: இந்திக்காரன்
« Reply #1 on: October 22, 2016, 06:25:16 PM »




பிரபா... உங்கள் கவிதை மிக மிக அருமை. கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அழுத்தமானதாக இருக்கிறது. மேலும் எழுத வாழ்த்துக்கள்.





Offline SweeTie

Re: இந்திக்காரன்
« Reply #2 on: October 22, 2016, 07:35:09 PM »
பிரபா   நீண்ட நாளைக்கு  பின்னர்  உங்கள் கவிதையை படிக்கும்போது  ஒரு ஐஸ் கிரீம்  குடித்த மகிழ்ச்சி எனக்கு.   வாழ்த்துக்கள்

Offline GuruTN

Re: இந்திக்காரன்
« Reply #3 on: October 22, 2016, 11:15:33 PM »
உணர்வுகள் என்பது ஒரு சாரார் உரிமை கொண்டாட கூடிய பொருள் அல்ல, பிழைக்க வழி தேடி நம் இடம் வந்தவர்களை நாம் அந்நியனாக பிரித்து நடத்தும்போது, அவருள் ஏற்படும் வலியையும் உணர்வையும் உங்கள் சொற்கள் படம் போட்டு காட்டி விட்டது.. அருமையான கவிதை.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: இந்திக்காரன்
« Reply #4 on: October 24, 2016, 11:12:00 AM »

வணக்கம்  பிரபா........

பதித்த ஒவ்வொரு கவிதையிலும்
ஆழமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர் .....
ஒவ்வொரு வரிகளும் அழகாக
எழுதியுள்ளீர் ....
''நீங்கள் இரவில் விழித்திருந்தால்
அவன் வீட்டுப்பக்கம்
போய்த்தான் பாருங்களேன்....
அலைபேசி
அழுகையுமா புரியாது உங்களுக்கு ...!''
அவ்வழுகைக்குரலைக் கேட்கதான் மறந்திட்டோம் .....
அருமையான கவிதை .....
படைப்புகளுக்கு மிக்க நன்றி .....
தொடரட்டும் கவிப்பயணம் ....
வாழ்த்துக்கள் .....

~ !! ரித்திகா !! ~
« Last Edit: October 24, 2016, 04:33:58 PM by ரித்திகா »