ரோஜா மலருக்கு
முட்கள் காவலா
முட்கள் இருந்தும்
மலர்கள் பறிக்கப்படுகின்றனவே
காவலர்கள் என்ன பண்ணுகிறார்கள்
முள்ளில் விரல் குத்தி
இரத்தம் வருகிறது
முள் குத்தாமல்
ரோஜா எப்படி சிவப்பானது
மலர் மகுடம் சூட்டியவர்களோ
மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்
முள்மகுடம் சூட்டியவனோ
இறைவனாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்
முள்ளுக்கு ரோஜா அழகல்ல
ரோஜாவுக்கு முள் தான் அழகு
மலர்களுக்கு ஆயுள் கம்மி
முட்களோ காலத்தைக் காட்டும்
கருவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன